பென்னாகரம், டிச.9- ஒகேனக்கல் கணவாய் பகுதி யில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 49 பேர் காயமடைந்தனர். இவர்களில் 7 பேர் அவசர சிகிச்சைக்காக தரும புரி அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், கண்ட மங்கலம் அருகே உள்ள கோண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர், ஓய்வுவி ழாவை கொண்டாடுவதற்காக, அவருடன் பணிபுரியும் சக மருத்து வர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கள், மருத்துவ உதவியாளர்கள் ஆகியோர்களின் குடும்பத்தினரு டன் தருமபுரி மாவட்டம், ஒகேனக் கல் பகுதிக்கு சுற்றுலா செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர். இதைய டுத்து கடலூர் பகுதியைச் சேர்ந்த சாய்குமார் என்பவருக்கு சொந்த மான சுற்றுலா பேருந்தை வாட கைக்கு எடுத்துள்ளனர். இந்தப் பேருந்தை விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஸ்ரீநாத் (22), கட லூர் மார்க்கெட் காலனி பகுதியைச் சேர்ந்த உதவியாளர் ராகுல் (23) ஆகிய இருவரும், கடலூர், பாண்டி, விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோ விலூர் ஆகிய பகுதிகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகி யோர்களின் குடும்பத்தினர் என 56 பேரை ஏற்றுக்கொண்டு சனியன்று ஒகேனக்கல் பகுதிக்கு சென்றுள்ள னர். அப்போது ஒகேனக்கல் கண வாய் பகுதி ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்து குறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, காவல் ஆய்வாளர்கள் சுரேஷ் குமார் (ஒகேனக்கல்), தமிழ்ச்செல் வன் (பென்னாகரம்), காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் அவசர சிகிச்சைக்காக பென் னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். பேருந்தில் பயணித்த 56 பேரில், 49 பேருக்கு மருத்துவ அலு வலர் கனிமொழி தலைமையி லான மருத்துவர்கள் சிகிச்சை அளித் தனர். மேலும், படுகாயமடைந்த வைஷ்ணவி (17), சத்யா (30), ராம் பிரசாத் (22), ரோஜிபியா (48), ஜெய னம்மாள், மதன்குமார், ஹன்னா ஆகிய ஏழு பேர் அவசர சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒகேனக் கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.