மழைக்கால வருகை எச்சரிக்கை செய்தது
உழைக்கும் பிராணிகளை சேகரிக்கச் செய்தது
உழைத்து சேகரிக்க அணில்கள் முடிவு
மழைக்கால எச்சரிக்கை நல்லதோர் வடிவு
சுருசுருப்பாய் அணில் கூட்டமாய் சேகரிப்பு
திருதிருவென விழித்தது சோம்பல் பாம்பு
மளமளவென குகையில் சேர்ந்தது தானியம்
கருகருவென தீயதாய் பாம்பின் எண்ணம்
அணில்களின் உணவுக் குகைக்குள் ஊர்ந்து
அரவம் உண்டது வயிறு புடைக்க
அணில்கள் குகைக்குத் திரும்பும் நேரம்
அரவம் குகைக்குள் சிக்கிய தருணம்
பாம்பின் இழிசெயல் விளக்கிய அணில்கள்
பாம்பைக் கைது செய்திடக் கேட்டன
பாம்பைக் கைது செய்திட ஆணை
பிறப்பித்தது காட்டு ராஜா சிங்கம்
உழைக்காமல் உணவு உண்ணும் எண்ணம்
பிழையான தீச்செயல் தீங்கு திண்ணம்
மழையைப் போல் உழைத்திட வேண்டும்
பிழையிலா உழைப்பால் உயர்ந்திட வேண்டும்
பெரணமல்லூர் சேகரன்