districts

திருப்பூர் அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் வன்முறையை தூண்டும் அறிக்கை

திருப்பூர், ஏப்.16- சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த  போராட்டம் நடத்தப்போவதாக அறி வித்துள்ள நிலையில், திருப்பூர் அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட் டுள்ள அறிக்கை வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்று சிஐ டியு திருப்பூர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கம் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.உன்னி கிருஷ்ணன் சனியன்று விடுத்துள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 40 ஆண்டு காலமாக திருப்பூர் அரிசி கடை வீதி பகுதியில் உள்ள  மொத்த வியாபார அரிசி மண்டியில்  அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்கும் வேலையை, எந்த பாதிப்பும் இல்லா மல் சுமைப்பணி தொழிலாளர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் வேலை செய்யும் கடைகளை சொந்த கடை போல் பாவித்து நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்து  வருகிறார்கள்.

சுமைப்பணி தொழி லாளர்கள் நம்பகத் தன்மையுடனும், உண்மையாகவும் இப்பகுதி வியா பாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் செயல்பட்டு வரு கிறார்கள். இந்நிலையில் விலைவாசி உயர் வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும் என கடந்த நான்கு மாத  காலமாக அரிசி மண்டி வியாபாரி கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். எனி னும் சுமூக தீர்வுக்கு வர முடியாத நிலையில் வேறு வழியில்லாமல் வேலை நிறுத்தம் செய்ய வேண் டிய நிலைக்கு சுமைப்பணி தொழி லாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத் தத்திற்கு முன்பாகவே சுமுக தீர்வு காண முன்வர வேண்டும் என்று சிஐ டியு சங்கம் விரும்புகிறது. ஆனால் தினசரி பத்திரிக்கைகளில் சனிக் கிழமை வெளிவந்துள்ள, அரிசி மண்டி மொத்த வியாபாரிகள் சங்கத் தினரின் அறிக்கை, பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மாறாக, சுமூக மான நிலையை சீர் குலைக்கும் வித மாகவும், வன்முறையை தூண்டக் கூடிய விதமாகவும் உள்ளது கவலை அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல, வன்மை யாக கண்டிக்கத்தக்கது. எனவே  அரிசி மண்டி மொத்த வியாபாரி கள் சங்கத்தினர் இந்த மோதல் போக் கைத் தவிர்த்து சுமூகமான முறை யில் கூலி உயர்வு பிரச்சினையில் பேசி தீர்வு காண முன்வர வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட சுமைப்பணி  தொழிலாளர் சங்கம் விரும்புகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.