திருப்பூர், மே 5- திருப்பூர் பின்னால் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத் திய 18வது திருப்பூர் புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுவின் நன்றி அறிவிப்பு கூட்டம் புதனன்று நடைபெற்றது. திருப்பூர் கே ஆர் சி சிட்டி சென்டரில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வர வேற்புக் குழுத் தலைவர் வழக்கறிஞர் பி மோகன் தலைமை தாங்கினார். இதில் வரவேற்பு குழு நிர்வாகிகள் அரிமா எம் ஜீவானந்தம், மோகன் கார்த்திக், எம்பரர் பொன்னுசாமி, நிசார் அகமது, காமராஜ், முத்துக்கண் ணன், சுப்பிரமணியம் உள்பட வர வேற்பு குழுவில் செயல்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், 18வது புத்தகத் திருவிழா வின் அனுபவங்களை பலர் பகிர்ந்து கொண்டனர். வரவேற்பு குழு செயலா ளர் ஆர்.ஈஸ்வரன் நிறைவுரை ஆற்றி னார். மக்களிடம் நம்பிக்கையை விதைத்திருக்கும் புத்தகத் திருவி ழாவை வரக்கூடிய காலத்திலும் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்வோம் என்று இக்கூட்டத்தில் பேசியவர்கள் தெரிவித்தனர்.