districts

img

கிராமங்களில் இருக்கும் குளங்களுக்கு தண்ணீர் விடக் கோரிக்கை

உடுமலை, ஆக.23 - திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணைகள் நிரம்பிய நிலையில், கிராமங்க ளில் இருக்கும் குளம் மற்றும் குட்டைக ளுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறத்து விட விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கோரிக்கையை நடைமுறைபடுத் தவில்லை என்பதால் விரைவில் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் முடிவு செய் துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம் தாலுகா கிரா மங்கள் அதிகம் உள்ள பகுதிகளாகும். இந்த  பகுதிகளில் மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள் ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் இதை நம்பியே உள்ளது. இந் நிலையில், கடந்த மாதம் முதல் தென்மேற்கு  பருவமழை பெய்வதால், பிஏபி தொகுப்பு அணைகள் மற்றும் அமராவதி அணை முழு  கொள்ளளவை எட்டி, உபரி நீர் திறக்கப்பட் டது. நிலத்தடி நீர் மட்டம் மற்றும் விவசா யிகளுக்கு பயன்படும் வகையில் கிராமங்க ளில் உள்ள அனைத்து குளம் மற்றும் குட்டை களுக்கும் அணைகளில் இருந்து தண்ணீர்  தர வேண்டும் என கோரிக்கை முன்வைக் கப்பட்டது. கிராமங்களில் குளம் மற்றும் குட்டைக ளில் தண்ணீர் இருந்தால், சுற்று வட்டார  பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்,  ஆழ் குழாய்கள் மூலம் மக்களின் தண்ணீர்  தேவையை பூர்த்தி செய்யவும், கால்நடைக ளின் தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய் யவும் முடியும் எனவே அணைகளில் இருந்து  தண்ணீர் திறக்க வேண்டும் என்று பல முறை  கோரிக்கை வைத்தும் பொது பணித்துறை அதிகாரிகளும், பிஏபி திட்டக்குழுவும் கண்டு  கொள்ளவில்லை. இதையடுத்து இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் போராட் டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.  பருவமழைக்கு உடுமலை தாலுகாவில் இருக்கும் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் நிரம்பியும், தண்ணீர் கேட்டு விவ சாயிகளும், பொதுமக்களும்  போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப டுத்தி உள்ளது. மேலும், குளம் மற்றும் குட்டைகளுக்கு தண்ணீர் விட்டால் தற்பொழுது வண்டல் மண்  எடுப்பது தடைபடும் என்பதால் தான் தண்ணீர்  திறக்க மறுக்கிறார்கள் என்றும் விவசாயி கள் சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.

உடுமலை தாலுகா ஆலாம்பாளையம் கிராமத் தில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் பூசாரி  நாயக்கர் குளத்திற்கு திருமூர்த்தி அணையில்  இருந்து முறையாக தர வேண்டிய தண்ணீரை திறந்து  விடாமல் உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.