districts

img

உற்றறிந்து நான் பெற்ற பாடம் இது!

கவிஞர் மகுடேசுவரன் முகநூல் பதிவு எனக்குத் தெரிந்த ஏற்றுமதி யாளர் அவர். நல்ல நண்பரும்கூட. திங்களூதிய அலுவலர் போல் காலை  ஏழரைக்கு வந்து நிறுவனத்தில் அமர்ந் தால் இரவு ஒன்பது அல்லது பத்துக் குத்தான் வீட்டிற்குக் கிளம்பிச் செல் வார்.  ஏறத்தாழ நாற்பது முதல் அறுபது தொழிலாளர்கள் எப்போதும் வேலை  செய்து கொண்டிருப்பார்கள். அவர்க ளில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் நிறுவனத்தின் மாறாத் தொழிலாளர் கள். குடும்பம்போல் இணைந்து  செயல்பட்டார்கள். ஏவவேண்டிய தில்லை, கண்டிக்கத் தேவையில்லை.  அவரவர் வேலைகளில் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார் கள்.  அவர் ஏற்றுமதி செய்தது அமெரிக் காவிற்கு. அங்கிருந்த இறக்குமதியா ளர் இவரிடம் வாங்கிய ஆடைகளைக்  குறிப்பிட்ட சில தொடர்கடைகளுக் குச் சேர்ப்பவர். அட்டவணை போட்டது போல் இருதரப்பாரும் நடந்து கொண்டனர். எல்லாம் நல்லபடியா கத்தான் நடந்தன. எந்தக் குறையு மில்லை.  ஆண்டுக்கு இரண்டு மூன்று கோடி ரூபாய் வரைக்கும் ஏற்றுமதி. வங்கி யில் அவருக்கு மதிப்பான பெயர். எவ் லாரும் கடன்வாங்கி வைத்திருக்கை யில் நம் நண்பர் பெரிய வைப்புத் தொகை இட்டிருந்தார். அவ்வாறு திறம்படச் செயல்பட்டார். சிறு நிறுவ னம்தான். தம் கண்பார்வைக்கு அப் பால் தொழில் பெருகி வளர்வது  குறித்து அவருக்கு அச்சமும் இருந் தது. அதனால் மிதமான தொழில் முனைவோராகவே செயல்பட்டார்.  முதன்முறையாகச் சாயப்பட் டறை மூடலில் ஏற்பட்ட தொழில்தடு மாற்றம். ஏற்றுக்கொண்டிருந்த எடுப ணிகளை அவரால் உரிய நேரத்தில்  முடிக்கமுடியவில்லை. காலந் தாழ்த்தி அனுப்பிய பெட்டிகளுக்குப் பணம் வருவதற்கும் காலந்தாழ்ந்தது.  அடுத்த அடி - சரக்கு சேவை வரிவி திப்பு. அடுத்து பணமதிப்பிழப்பு. அடுத்து நூல்விலையேற்றம். அடுத்து  வந்த கொடுந்தொற்று. இன்றைக்கு அந்த நிறுவனம் இருக்குமிடம் தெரிய வில்லை. 

இருபத்தைந்தாண்டுகளாக ஒரே  இடத்தில் பணியாற்றிய தொழிலாளர் கள் சிதறிப் போயினர். அவர்களா லும் வேறு நிறுவனத்தில் புதிய மேலாண்மையின் கீழ் பொருந்திப் போகமுடியவில்லை. நிறுவனத்தில் கூட்டாளியாக இருந்தவர்களைப் பிரித்துவிட்டார். அவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு இறந்தும் போனார்.  இப்போது நண்பரின் நிறுவனம்  எந்நிலையில் உள்ளது என்பதை அறி யும் மனத்திண்மை எனக்கில்லை.  கடைசியாகப் பேசியபோது நிறுவ னத்தை இடம்மாற்றிவிட்டதாகக் கூறி னார். பழைய தொழிலாளர்கள் யாருமே இல்லை. நிறுவனத்திற்கு வழக்கம்போல் நேரத்தே வந்தவர்  தாமே கூட்டிப் பெருக்கிக்கொண் டுள்ளதாகச் சொன்னார்.  வேலை இல்லைதான். ஆனாலும்  நிறுவனத்திற்கு வந்தமர்வது அவரது  பழக்கம். இனி அந்தப் பழைய காலம்  வாராது என்பது எங்களுக்குத் தெரி யும். தொழிற்போக்குகள், தொழிலா ளர் போக்குகள் போன்றவை அந்தந்த  நேரத்து வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு முன்னேறத்தான் பார்க்கும்.  அவ்விடத்தில் சிறிதே தவறவிட்டா லும் கதை முடிந்தது.  தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில்வழியே பெறவேண்டிய வர வினைக் கருதாத எம்முடிவை எடுத்தா லும் தொழில் படுத்துவிடும். நம் தரப் பில் செய்ய வேண்டியது இஃ தொன்றே. தொழிலை முடித்துக்கட் டும் புறக்காரணிகள் பேரலைகளாய்ப் புறப்பட்டு வரும்போது செய்வதற்கு எதுவுமில்லை. நூற்றுக்கணக்கான முதலாளிகளையும் தொழிலாளிக ளையும் கண்டு கேட்டு உண்டுயிர்த்து  உற்றறிந்து நான் பெற்ற பாடம் இது.

;