districts

புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாணவர்கள் தேர்ச்சி

புதுகை மாவட்டத்தில் 90 சதவீதம் தேர்ச்சி


பிளஸ்-2 பொதுத்தேர்வு 



புதுக்கோட்டை, ஏப்.19-பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு எழுதிய20 ஆயிரத்து 211 பேரில் 18 ஆயிரத்து 191பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.01 சதவீதம் ஆக்கும். புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 6785 பேரில் 6168 பேரும், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் எழுதிய 7841 பேரில் 7094 பேரும், இலுப்பூர்கல்வி மாவட்டத்தில் எழுதிய 5585 பேரில் 4929 பேரும் தேர்ச்சி அடைந்தனர். மொத்தத்தில் 20,211 பேர் எழுதிய தேர்வில் 18,191பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 9074 மாணவர்களில் 7777 பேரும், 11137 மாணவிகளில் 10416 பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.71 சதமும், மாணவிகள் 93.51 சதமும் தேர்ச்சி பெற்று சராசரியான தேர்ச்சி விகிதம் 90.01 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு பெற்ற 88.53 சதத்தைவிட கூடுதலாகும்.மாவட்டத்தில் அரையப்பட்டி, கீரமங்கலம், அம்மாபட்டினம், வடகாடு, மண்டையூர், ஆழவயல், புலியூர், சூரியூர், தாஞ்சூர், கல்லூர், திருமயம், புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆகிய அரசுப் பள்ளிகளும், திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா, புதுக்கோட்டை மவுண்சீயோன், வைரம்ஸ், கற்பக விநாயகா, அறந்தாங்கி அன்னை மீனாட்சி உள்ளிட்டதனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் என மாவட்டத்தில் 49 பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளன.


திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பில் 82.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி


திருவாரூர், ஏப்.19-12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்-19ல்வெளியானது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் 85.52 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 1.03 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு மதிப்பெண் முறை முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு கூடுதல் மதிப்பெண் 600 என மாற்றி அமைக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 68 மாணவர்களும், 8 ஆயிரத்து 152 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 220 பேர்தேர்வெழுதினர். இதில் 4 ஆயிரத்து 914 மாணவர்களும், 7 ஆயிரத்து 389 மாணவிகள் என 12ஆயிரத்து 303 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 80.98 சதவீதமும், மாணவிகள் 90.64 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


பேராவூரணி அரசுக் கல்லூரி மாணவர் சேர்க்கை துவக்கம்


தஞ்சாவூர், ஏப்.19-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்.22-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இளங்கலை தமிழ் (பி.ஏ.தமிழ்), ஆங்கிலம், வணிகவியல் (பி.காம்), கணிதம் (பி.எஸ்சி), கணினி அறிவியல், இளநிலை வணிகநிர்வாகம் (பிபிஏ) உள்ளிட்ட 6 பாடப் பிரிவுகளுக்கு இருபால் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.விண்ணப்பம் ஏப்.22 ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி மே 9 ஆகும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அரசு விதிமுறைகளின் படி நடைபெறும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ 48, பதிவுக்கட்டணம் ரூ.2 ஆக ரூ.50 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சாதிச்சான்று நகலை கொடுத்தால் பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டும்செலுத்தினால் போதுமானது என கல்லூரிமுதல்வர் (பொ) சி.இராணி தெரிவித்துள்ளார்.

;