சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் சாடல்
திருவள்ளூர், நவ.30- குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் உருவாகும் நகரமாக திருவள்ளூர் உள்ளது. இதனை சரி செய்யாமல், அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் குற்றம்சாட்டியுள்ளார். திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் கூடு தலாக மருத்துவர்கள், செவிலி யர்கள் நியமிக்கப்பட வேண்டும், இதய நோய், தைராய்டு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து, மாத்திரை கள் இருப்பு வைக்க வேண்டும், தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும், வட்டார மருத்துவ மனைகளை, ஆரம்ப சுகா தார நிலையங்களை மேம்படுத்த வேண்டும், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவ மனையை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று (நவ.29) திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செய லாளர் ஆர்.தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் என்.கீதா உட்பட பலர் பேசினர். இதில் மாநிலக்குழு உறுப்பி னர் ப.சுந்தரராசன் பேசுகையில், ‘திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமாக குடியிருப்புகளிலிருந்து வரும் கழிவுநீர் அனைத்தும் பெரியகுப்பம் பகுதியில் தான் தேங்கி நிற்கின்றது. இதனால் டெங்கு காய்ச்சல் உட்பட பல்வேறு வகையான மர்ம நோய்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 21 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மேலும் நிலத்தடி நீரும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் உருவாகும் இடமாக திருவள்ளூர் நகரம் மாறியுள்ளது. எனவே மருத்துவ மனையை மேம்படுத்த, சுகாதாரத்தை பேணிக்காக்க மாவட்ட ஆட்சியரும், சுகாதார துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், பேசுகையில், ‘திருவள்ளூ ரில் போலி மருந்துகள் தயாரிக்கும் ஆலை உள்ளதாக கூறப்படுகிறது. முதலாளிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்கு மனித உயிர்களை பலியிட வேண்டாம். போலி மருந்து கள் தயாரிக்கும் ஆலையை கண்ட றிந்து அதனை தடை செய்ய வேண்டும். மாவட்டத்தில் மருத்து வர்கள் பற்றாக்குறை நிலவுவதால், மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்து வர்கள் நியமிக்க வேண்டும். தைராய்டு, சர்க்கரை நோய், இருதய நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் பற்றாக்குறையாகவே உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும்’ என்றார்.