குமாரபாளையம், பிப்.20- குமாரபாளையத்தில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் கூலி உயர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் உடன் பாடு எட்டப்பட்டு கையெழுத்தானது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத் தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக, விசைத்தறி தொழிலா ளருக்கு கூலி உயர்வு ஏற்படவில்லை. இந்நி லையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக 75 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என கேட்டு விசைத்தறி கூலி தொழிலாளர் கள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற் கொண்டனர். இதனைத்தொடர்ந்து, குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலை யில், சுமூக தீர்வு எட்டப்படாத நிலை ஏற்பட் டது. கடந்த வெள்ளியன்று இரவு 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், 12 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க விசைத்தறி அடப்பு உரிமை யாளர்கள் முன் வந்தனர்.
ஆனால், விசைத் தறி தொழிலாளர்கள் 20 சதவிகிதம் கூலி உயர்வு வேண்டும் என கேட்டு வட்டாச்சியர் அலுவலக வாயிற்பகுதியில் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும், விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு சங்கத்தின் சார்பிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், திங்களன்று குமாரபாளை யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் கூலி உயர்வு பேச்சுவார்த்தை, தொழிலாளர் துறை இணை ஆணையர் சமரசம் வட்டாட்சி யர், காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் முன் னிலையில் நடைபெற்றது, முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப் படையில், அடப்பு விசைத்தறி உரிமையாளர் களுக்கு, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் கள் 15 சதவிகிதம் கூலி உயர்வு வழங்குவது, விசைத்தறி அடப்பு உரிமையாளர்கள், விசைத் தறி தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் கூலி உயர்வு வழங்குவது எனவும் முடிவானது. விசைத்தறி தொழிலாளர்கள் 20 நாட்களுக்கு மேலாக ஒன்றுபட்ட போராட்டம் நடைபெற் றது. இந்நிலையில், இந்த கூலி உயர்வு ஒப் பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஓலப் பாளையம், காந்திபுரம், சடையம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத் தறி தொழிலாளர்கள் இந்த கூலி உயர்வு போராட்ட வெற்றியை, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.