districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜன.30- அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 14 ஆவது வார்டு மக்களுக்கு குடி நீர், தெருவிளக்கு, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வார்டு உறுப்பினர் கே.விஜய லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனி சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ. ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். ஏ.ஆர்.துரைசாமி, ஏ.பி.திருநீலகண்டன், பி.தளிர்க்கொடி ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதி யாக ஆப்பக்கூடல் கிளைச் செயலா ளர் எம்.காளீஸ்வரன் நன்றி கூறி னார். இதேபோன்று பவானி வட்டம்,  புன்னம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வேலா மரத்துார் கிளை செயலாளர் சாரதி (எ) முனியப்பன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் எஸ். மாணிக்கம், தாலுகா கமிட்டி உறுப் பினரும், புன்னம் ஊராட்சி எட்டாவது  வார்டு உறுப்பினர் என்.சின்னுசாமி, பெரிய புலியூர் ஊராட்சி வார்டு உறுப் பினர் என்.பாலமுருகன், வண்ணம் பாறை ராஜு மற்றும் கோபி (எ) ராம சாமி, முத்துசாமி, ராமாயி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில், பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண் டும். வேலாமரத்தூர் காலனியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாத உடனடி யாக திறக்க வேண்டும். மயான வசதி இன்றி தத்தளிக்கும் மக்களுக்கு மயான வசதி செய்து கொடுக்க வேண் டும். விபத்து ஏற்படும் முன் குடியி ருப்பு மேல் செல்லும் தாழ்வான மின் கம்பிகளை மாற்றி அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட் டது.

;