districts

தலைநகரில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு மார்க்சிஸ்ட் கட்சி ஆவேசம்

கோவை, டிச. 1 –  வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் தில்லியில்  போராடும் விவசாயிகளின் கோரிக் கையை நிறைவேற்ற வலியறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆவேசமிகு போராட்டங்களில் ஈடுபட்டனர். மத்திய அரசின் விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்  கோரி தலைநகர் தில்லியில் கடந்த ஐந்து நாட்களாக விவசாயிகள் மாபெ ரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதற்கு மாறாக கண்ணீர் புகை குண்டு, தண்ணீர் பீச்சியடிப்பு, தடியடி என மத்திய பாஜக  அரசின் காவல்துறை கடும் அடக்கு முறையை ஏவி வருகிறது. இதற்கு நாடு  முழுவதும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு மற்றும் சிங்கை நக ரக் குழுக்களின் சார்பில் பெருந்திரள் முற்றுகைப்  போராட்டம்  நடைபெற் றது. மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன் தலைமையில் அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட் டத்தில் பங்கேற்றோரை காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக அப்புறப்ப டுத்த முயன்றனர். இதனால் காவல் துறையினருடன் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்று கையிட்டனர். இதன்பின் காவல்துறையினரின் தடையை மீறி பிஎஸ்என்எல் அலுவ லகத்திற்குள் நுழைந்து தரையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடு பட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோ கரன், அஐய்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், சிங்கை  நகர செயலாளர் வி.தெய்வேந்திரன், பீளமேடு நகர செயலாளர் கே.பாண்டி யன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட் டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம்  

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.உதயகுமார் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஐ.ஞானசௌந்தரி, கிழக்கு மாநகர செயலாளர்  பொன்.ரமணி, மேற்கு மாந கர செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு  மாநகர செயலாளர் என்.பிரவீன்கு மார், சேலம் தாலுகா செயலாளர் பழனி சாமி, ஓமலூர் தாலுகா செயலாளர்  பி.அரியா கவுண்டர் மற்றும் மாவட் டக்குழு உறுப்பினர்கள்  பி.சந்திரன் பி.பன்னீர்செல்வம், பி.ரமணி, டி.பர மேஸ்வரி, ஜி.கண்ணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு, மத்திய அரசிற்கு எதிரான முழக்கங் ளை எழுப்பினர். ஈரோடு ஈரோடு தொலைபேசி நிலையம், சூரம்பட்டி, சத்தியமங்கலம், கொடு முடி, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், தாலுகா செயலாளர் விஜயகுமார், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், விஜ யராகவன், மாவட்டக் குழு உறுப்பி னர் கே.சண்முகவள்ளி, ஜெகநாதன், இரா.திருத்தணிகாசலம், ஆ.சகா தேவன், சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், பி.கனகராஜ், விவசாய சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி, தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் பி.கணேஷ், தீ.ஒ.முன்னணி தாலுகா செயலாளர் ரங்கசாமி, மாதர் சங்க மாவட்ட உதவித் தலைவர் ஆர்.கோமதி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வே.மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டம், சேரம்பாடியில் உள்ள கனரா வங்கியை முற்றுகையி டும் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.ஜே.வர்கீஸ் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட செயலாளர் ஏ.யோகண் ணன், விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். இதையடுத்து போராட்டத்தில்  ஈடு பட்ட அனைவரையும்  காவல்து றையினர் கைது செய்தனர். இதேபோல், கூடலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி, திமுக ராஜேந்திரன், பாண்டியராஜ், லியா கத் அலி, காங்கிரஸ் அம்சா, அப்துல் ரகுமான், சாஜி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு, எஸ்.தங்கராஜ், யோகசசி, சிபிஐ  பாலகிருஷ்ணன், விசிக சகாதேவன், முஸ்லிம் லீக் கட்சியின் அனீபா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங் களை எழுப்பினர்.

தருமபுரி

தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.நாகராஜன்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில  செயலாளர் சி.நாகராசன், மாவட்ட தலைவர் பி.ஜீவா, மாவட்ட பொரு ளாளர் ஏ.தெய்வானை, மாநிலக்குழு உறுப்பினர் சி.அங்கம்மாள், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  

திருப்பூர்

திருப்பூர் ரயில் நிலையம் எதிரில்  உள்ள தலைமைத் தபால் நிலை யத்தை முற்றுகையிடும் போராட்டத் திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தலைமை ஏற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்.  இதில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்பட கட்சி யின் முன்னணி ஊழியர்கள், சிஐடியு தொழிற்சங்கம், மாதர் சங்கம், வாலி பர் சங்கத்தின் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கம் எழுப்பினர்.  முன்னதாக, தபால் நிலைய முற்று கைப் போராட்டத்தைத் தடுக்கும் நோக்கத்தில் காவல் துறையினர் சுற்றிலும் கயிறு கட்டி தடுப்பு ஏற்ப டுத்தினர். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி யினர் காவலர்களின் தடுப்புகளைத் தகர்த்துக் கொண்டு தபால் நிலை யத்திற்குள் புகுந்தனர். அப்போது காவ லர்களுக்கும், போராட்டத்தில் ஈடுபட் டோருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையும் மீறி தபால் நிலை யத்தை முற்றுகையிட்டு மோடி அரசை  கண்டித்தும், வேளாண்மை சட்டங் களை உடனடியாக ரத்து செய்ய வலியு றுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.  இதேபோல் ஊத்துக்குளி, அவி நாசி உள்ளிட்ட பல இடங்களில் நடை பெற்ற முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், மாவட்டத் துணைச் செயலாளர் எஸ். வெங்கடாசலம், சிபிஎம் மாவட்ட குழு  உறுப்பினர் பி.முத்துச்சாமி, தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஈஸ்வ ரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.கே.பழனிசாமி, கே.கண்ணையன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

;