districts

திரிபுராவில் 81%, மணிப்பூரில் 78%

புதுதில்லி, ஏப். 11-முதல்கட்டமாக ஏப்ரல் 11 வியாழனன்று நடந்த மக்களவைத் தேர்தலில் திரிபுராவில் 81 சதவீத வாக்குகளும், மணிப்பூரில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத்தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவை களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.மக்களவைத் தேர்தலில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 91 தொகுதிகளில் முதல்கட்டமாக வியாழனன்று வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளது.ஆந்திரா 25, அருணாச்சலப்பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4, சத்தீஸ்கர் 1, ஜம்மு - காஷ்மீர் 2, மகாராஷ்டிரா 7, மணிப்பூர் 1, மேகா லயா 2, மிசோரம் 1, நாகாலாந்து 1, ஒடிசா 4, சிக்கிம் 1, தெலுங்கானா 17, திரிபுரா 1, உத்தரப்பிரதேசம் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது.மேலும், உத்தர்கண்ட் 5, மேற்கு வங்கம் 2, அந்தமான் நிகோபார் தீவுகள்1, லட்சத்தீவுகள் 1 என மொத்தம் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் நடைபெற்றது.முதல்கட்டத் தேர்தலில் மாலை 5 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்.திரிபுரா - 81.23ரூ, மேகாலயா - 62ரூ, லட்சத்தீவுகள்: 65.9ரூ, நாகலாந்து - 68ரூ, மணிப்பூர் - 78.20ரூ, தெலுங்கானா - 60.57ரூ, அசாம் - 68ரூ, உ.பி. - 59.77ரூ, பீகார் - 53.06ரூ

;