districts

img

திருமுருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி பேரூராட்சியில் திமுக கூட்டணி பெரும் வெற்றி

அவிநாசி, பிப்.22- திருமுருகன்பூண்டி நகராட்சி மற்றும்  அவிநாசி பேரூராட்சியில் திமுக தலைமை யிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.  திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சியில் 27 வார்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் 9 இடங்களிலும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள் ளது. இதன் மூலம் 17 இடங்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி வெற்றி பெற்று திரு முருகன்பூண்டி நகரமன்றத்தை கைப்பற்றி யுள்ளது.  இதேபோல், அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக 7 இடங்களி லும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், அதி முக 6 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங் களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் அவிநாசி பேரூராட்சியை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள் ளது.