districts

img

எதிர்மறை உணர்வுகளை தட்டி எழுப்பி மலிவான அரசியல் செய்கிறது பாஜக

ஈரோடு, ஜூன் 25- மனிதர்களின் எதிர்மறை குணங் களையும், மலிவான உணர்ச்சி களை தட்டி எழுப்பி ஆர்எஸ்எஸ், பாஜக அரசியல் செய்வதாக தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் பொதுக்கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பி னர் திருமகன் ஈவேரா தெரிவித் தார்.  வெறுப்பு அரசியலை வேரறுப் போம் என்கிற தலைப்பில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின்  சார்பில் ஈரோட்டில் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. பொதுக்கூட்டத் திற்கு மாநில உதவி தலைவர் ப.மாரி முத்து தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அல்ஹாஜ் கே.எஸ். இஸாரத் அலி வரவேற்றார்.  இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற  தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவேரா பேசுகையில், அனைத்து பகுதியினரையும் ஒன்றிய அரசு  துன்புறுத்தி வருகிறது. ஒவ்வொரு  துறையினர் மீதும் இந்த அரசு ஒவ் வொரு விதமான அடக்குமுறையை கையாள்கிறது. அன்பு, காதல், ஈகை, கருணை, சகோரத்துவம் அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. அதேபோல், எதிர்மறை யான குணங்களான பொறாமை, பேராசை, களவு, கொலை அகிய குணங்களும் மனிதர்களுக்கு உண்டு. எதை தட்டி எழுப்பி நாம்  இயக்கம் அமைக்கிறோம் என்பது தான் இங்கே முக்கியம்.

 ஆர்எஸ்எஸ், பாஜக இந்த எதிர் மறை குணங்களையும், மலிவான உணர்ச்சிகளை தட்டி எழுப்பி இயக் கம் நடத்த முயற்சி செய்கிறார்கள். கலவரத்தின் போது பரிணாம வளர்ச்சி தத்துவப்படி பயம் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். இதை வைத்துதான் பாஜக அரசியல் செய்கிறது. இதை நாம் கட்டாயம் முறியடித்தாக வேண்டும். அனைத்து சிறுபான்மையினர், மாற்று சிந்தனையாளர்கள் உள் ளிட்ட அனைவருக்குமான வளர்ச்சி யின் மேல் அக்கறையுள்ள சமூகம் தான் வளர்ந்த, நாகரிக சமூகமாக இருக்க முடியும். அந்த சமுதாயத் தின் பிரதிபலிப்பாக தான் அரசாங் கம் இருக்க வேண்டும். அரசாங்கத் தின் கடமை என்பது பிரிவினை எண் ணம் தோன்றும்போது, வேற்றுமை யில் ஒற்றுமை காண்பதாக இருக் கும், இருக்க வேண்டும். நம் மூதா தையர்கள் அப்படித்தான் இருந்தார் கள். கருத்துகள் மோதலாம். மனித னோடு மனிதன் மோதக் கூடாது. நம்  மூதாதையர்கள் அதைத்தான் விரும்பினார்கள். அந்த கனவை தகர்த்தெறிகின்ற வகையில் பாஐக அரசு ஒவ்வொரு திட்டமாக கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்க ளில், அனைத்து தூண்களிலும் இவர்கள் ஊடுருவியுள்ளனர். ராணு வத்திலும் அதனை செய்கிறார்கள். தனியார் ராணுவம் என்பது அமெ ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள் ளது. இது மிகவும் ஆபத்தான பாதையை நோக்கி செல்வதாகும். அக்னிபாத் என்பது கூலிப்படைக்கு ஆள் எடுப்பது போல உள்ளது. எனவே, பல வேறுபாடுகள் இருந் தாலும் நாம் அனைவரும் இணைந்து இந்த சாத்தானை விரட்ட  வேண்டும் என்றார்.  இந்நிகழ்வில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட அமைப்பாளர் கே.துரைராஜ், மாவட்ட செயலாளரும் மௌலானா மௌலவி அல்ஹாஜ் கே.ஃபைஜுர் ரஹ்மான் பாக்கவி, மாவட்ட உதவி தலைவர் அருட் பணி டி.விஜயகுமார், மாவட்ட பொருளாளர் கே.நடராஜன், உதவி  செயலாளர் எஸ்.ஸ்டாலின், பி.சுந்த ரராஜன், அம்மணியம்மாள், கொங் குநதி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். நிறைவான எஸ்சிவஞானம் நன்றி கூறினார்.