districts

img

என்ஐஆர்எப் தரவரிசை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலை., சாதனை

கோவை, ஜூன் 13- என்ஐஆர்எப் எனப்படும் தர வரிசை – 2023க்கான பட்டியலில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சாதனை படைத்துள்ளது. வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகள் பிரிவின் கீழ் உள்ள 152 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 5 ஆவது இடத்தையும், இந்திய வேளாண் பல்கலைக்கழகங்களில் இரண்டாவது இடத்தையும், அனைத்து பொது மற்றும் தனியார் நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள், மத் திய மற்றும் மாநில நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் போன்ற வற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் 2478 நிறுவனங்களில் 93 ஆவது இடத்தையும் மற்றும் பங்கேற்ற 1073 பல்கலைக்கழகங்களின் தரவரிசை யில் 72 ஆவது இடத்தையும் பெற் றுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, சிறந்த செயல் திறன், பிராந்திய, தேசிய மற்றும் சர்வ தேச அளவில் கற்பித்தல், ஆராய்ச்சி, வேளாண் வணிகம் மற்றும் திறந்த வெளி மற்றும் தொலைதூரக் கல்வி யின் செயல்பாடு ஆகியவற்றின் அர்ப் பணிப்பே வளர்ச்சிக்கு காரணம், என் றார். பல ஆண்டுகளாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்க ளின் எண்ணிக்கை அதிகரித்து நாற் பாதாயிரத்தை கடந்துள்ளது. இக் காலகட்டத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் மெய்நிகர் ரியா லிட்டி தொழில்நுட்பத்தின் அடிப்ப டையில் 15 கற்போரை மையமாகக் கொண்ட கல்வித் தொகுதிகளையும், 12 ஸ்மார்ட் வகுப்பறைகளையும், ஏழு மொழி ஆய்வகங்களையும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய வேளாண் உயர்கல்வித் திட் டம் - நிறுவன மேம்பாட்டுத் திட்டத் தின் கீழ் நிறுவியுள்ளது. பல்கலைக்கழகம் 32 நிதி நிறுவ னங்களின் மூலமாக நிதியை பெற்று, 483 ஆராய்ச்சி திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. இப்பல்கலைக் கழகம் கடந்த மூன்று ஆண்டுகளில் 51 பயிர் இரகங்கள், 25 பண்ணைக் கருவிகள் மற்றும் 10 தொழில்நுட் பங்களை வெளியிட்டுள்ளது. எட்டு காப்புரிமைகள் பெறப்பட்டன; மதிப் பீட்டு காலத்தில் 9 காப்புரிமைகளும், 2 காப்புரிமை விண்ணப்பங்களும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விஞ்ஞானிகளால் தாக்கல் செய் யப்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகம் பல சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட 85க்கும் மேற்பட்ட புரிந்து ணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சமீபத்தில், ICAR - சர்தார் வல்லபாய் படேல் சிறந்த நிறு வன விருது, 8 ஆவது FICCI உயர் கல்வியில் சிறந்த பல்கலைக்கழக விருது 2022 ஆகிவற்றைப் பெற்றுள் ளது. 2022 - 2023 ஆம் ஆண்டில் QS  தெற்காசிய பல்கலைக்கழக தரவரி சையில் 65 ஆவது இடத்தைப் பெற் றுள்ளது குறிப்பிடத்தக்கது.