districts

img

மாணவர் சங்கத்தினர் உழைப்பு தானம்

நாமக்கல், ஜூன் 28- நாமக்கல் அருகே உள்ள அரசு கலைக்கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தி னர் புதனன்று தூய்மை பணி யில் ஈடுபட்டனர்.  இந்திய மாணவர் சங்க மானது சுதந்திரம், ஜனநாய கம், சோசலிசம் என்கிற முழக் கத்தை முன்வைத்து,  படிப் போம், போராடுவோம் என கொள்கைப்பிடிப் போடு இயங்கி வருகிற இயக்கமாகும். அதே நேரத்தில், மாணவர்கள் நலனுக்காக மட்டு மல்லாமல், சமூகத்தில் பீடித்திருக்கிற நோயை எதிர்த்தும் களம் கண்டு வருகிறது. இதே போன்று, ரத்த தானம், உழைப்பு தானம் உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத் துள்ள ஆண்டகளூர் திருவள்ளுவர் அரசு  கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வேண்டும். விளையாட்டு மைதா னத்தில் அரசின் தொழில் பூங்கா அமைப்ப தற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இதற்காக இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு வகையான போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பருவத் தேர்வுகள் முடிந்து கல்லூரிகள் திறக் கப்பட்டுள்ளது. கோடை விடுமுறையடுத்து, விளையாட்டு மைதானத்தில், செடி, கொடி கள் முளைத்து புதர்மண்டி காணப்பட்டன. இதனையடுத்து, களம் இறங்கிய இந்திய மாணவர் சங்கத்தினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.  இந்த பணிக்கு இந்திய மாணவர் சங்க  கிளை நிர்வாகி ராஜசூர்யா தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் மு.தங்கராஜ், கிளை நிர் வாகி மனோஜ் உள்ளிட்ட திரளான கல்லூரி மாணவர்கள் ஆகியோர் தூய்மை பணியில் பங்கேற்றனர். தூய்மை பணி மேற்கொண்ட இந்திய மாணவர் சங்கத்தினரை பொதுமக் கள், பேராசிரியர்கள் வெகுவாக பாராட்டி னர்.