districts

img

மாநில அளவிலான பேச்சுப்போட்டி

சேலம், அக்.12- சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் “தமிழ் என் மூச்சு 2023”  எனும் தலைப்பில் மாநில அளவிலான பள்ளி மாணவர் களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதன்பின் நடைபெற்ற பரிச ளிப்பு விழாவிற்கு முனைவர் சரவணன் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் நடராஜன் வரவேற்றார். கல்லூரி முதல் வர் பேகம் பாத்திமா, துணை முதல்வர் சாந்தகுமாரி, கல்லூரி நிர்வாகி மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக இலக்கியப் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரி வித்தார். முடிவில், துணை பேராசிரியர் மேகலா நன்றி கூறி னார்.