சேலம், டிச.23- சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பூப் பந்தாட்ட போட்டியில் ஏராள மானோர் கலந்து கொண்ட னர். தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம், சேலம் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் மற்றும் எம்டிஎம் பூப்பந்தாட்ட குழு சார்பில், 69 ஆவது மாவட் டங்களுக்கு இடையேயான சீனியர், மாநில ஐவர் பூப் பந்தாட்ட போட்டிகள் சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல் லூரியில் சங்கத்தலைவர் நடே சன் தலைமையில் நடை பெற்றது. சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத் தார். மாநிலம் முழுவதும் இருந்து 38 அணிகள் பங் கேற்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி கள் நடைபெற்று வருகின் றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பூப்பந்தாட்ட செய லாளர் சக்திவேல், பொதுச் செயலாளர் எழிலரசன், பொருளாளர் பார்த்திபன், துணைத்தலைவர் சீனிவா சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.