நாமக்கல், ஜூன் 14- நாமக்கல் அருகே கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டவர்களின் குழந் தைகளுக்கு உறுதியளித்தபடி வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத் தினர் செவ்வாயன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோட்டைச் சேர்ந்த சுப்பிரமணி - மேனகா தம்பதியினர் கொரோனா காலத்தில் வருமானம் இல்லாத சூழலில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை . இதனால், கந்து வட்டி கும்பலின் தொடர் மிரட்ட லால் ஓர் ஆண்டுக்கு முன்பு மரண வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனையடுத்து, இவர்களின் இரண்டு குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு இலவச வீட்டுமனை உள்ளிட்ட நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதேபோல், திருச்செங்கோடு, திம்மராவுத்தம்பட்டி அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த சண்முகம் என் பவர் விசைத்தறி வைத்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பி.சோனிய குமார் என்பவரின் கட்டத்தை வாட கைக்கு எடுத்து சண்முகம் விசைத் தறி தொழில் செய்து வந்தார். இந் நிலையில், சண்முகத்தின் விசைத் தறியை சோனியகுமார் தர மறுத்து வருகிறார். இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி விசைத் தறி தொழிலாளர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்தாண்டு ஜூலை 27ஆம் தேதியன்று மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் தலை மையில், இரு தரப்பினர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடை பெற்றது. இந்த பேச்சுவார்த்தை யில், கோட்டாட்சியர் விசார ணைக்கு உத்தரவிட்டார். ஆனால், விசாரணை நடைபெறவில்லை.
இந்நிலையில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண் டும். மேலும், கோட்டாட்சியர் விசார ணையை அமல்படுத்தாத நிர்வா கத்தை கண்டித்து, திருச்செங் கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்தனர். இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில், ஜூன் 22 ஆம் தேதியன்று திம்மராவுத்தம் பட்டி சண்முகம் விசைத்தறி பிரச் சனை குறித்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு தீர்வு காணப்படும். மேலும், கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விசைத்தறி தொழிலாளி சுப்பிரமணி, மேனகா தம்பதியரின் குழந்தைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நிவாரண உதவி உடனடி யாக பெற்று தருவதென அதிகாரி கள் உறுதியளித்தனர். இதை யடுத்து, காத்திருப்பு போராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டதாக நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத் தினர் தெரிவித்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அசோகன், சிஐடியு மாவட்ட செய லாளர் என்.வேலுச்சாமி, சம் மேளன மாநில குழு உறுப்பினர் கே. பாலுசாமி, சிஐடியு மாவட்ட உதவி தலைவர் எம்.செங்கோடன், மாவட்ட உதவி செயலாளர் சு. சுரேஷ் மற்றும் திருச்செங்கோடு வீரமணி, முருகேசன், சண்முகம், கோபால், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஐ.ராயப்பன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌ சல்யா, வட்டாட்சியர் பச்சமுத்து, துணை வட்டாட்சியர் சாமுண் டீஸ்வரி, வருவாய் ஆய்வாளர் செல்லதுரை, காவல் உதவி ஆய் வாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.