districts

img

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்: அவிநாசியில் பாஜகவினர் ரகளை

அவிநாசி, டிச.2- அவிநாசி அரசு கல்லூரி வளாகம் முன்   திமுகவினர் நீட் தேர்வுக்கு எதிராக கையெ ழுத்து இயக்கத்தை நடத்தி கொண்டிருந்த னர்.  அப்போது அங்கு வந்த பாஜகவினர் ரக ளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரி முன்பு நீட் தேர்வுக்கு எதிராக கையெ ழுத்து இயக்கத்தில் திமுகவினர் ஈடுபட்டி ருந்தனர். இதையறிந்த பாஜகவினர்,  கல்லூரி  முன்பு முகாம் நடத்தக் கூடாது, உரிய அனும தியில்லாமல் முகாம் நடத்தப்படுகிறது எனக்  கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல றிந்த சம்பவயிடத்துக்கு வந்த அவிநாசி போலீ சார் இரு தரப்பினரிமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதைதொ டர்ந்து இருவரும் கலைந்து சென்றுவிட்ட னர். இதையடுத்து, அவினாசி புதிய பேருந்து  நிலையம் முன்பு மீண்டும் நீட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.