அவிநாசி, மார்ச் 18- சாக்கடை நீர் தேங்குவதால் நோய் தொற்று ஏற்படு வதாக கூறி மங்கலம் செல்லும் புறவழிச் சாலையில் பொது மக்கள் திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம ஊராட்சிக் குட்பட்ட மகாநகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றிலிருந்து வெளி யேறும் கழிவுநீர் அப்பகுதியில் குட்டை போல் தேங்கி நிற்பதா கவும். இது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை. இதனால், இப்பகுதி மக்களுக்கு உடல் நலம் பாதிக் கப்படுவதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி போலீ சார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களி டம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வுகாண நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைய டுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.