districts

img

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

கோவை, ஜூன் 13- கோடை விடுமுறைக்கு பின்  கோவையில் திங்களன்று பள்ளி கள் திறக்கப்பட்ட நிலையில், மாண வர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்ற னர். கோவை மாவட்டத்தில் 193 அரசு  மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் என 658 உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மேலும், ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளி கள் உள்ளன. ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்க ளுக்கு முழு ஆண்டுத்தேர்வு முடிவ டைந்து கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம்  தேதி கோடை விடுமுறை அறிவிக்கப் பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழ மையுடன் கோடை விடுமுறை முடிந் தது. இதையடுத்து  மாநிலம் முழுவ தும் பள்ளிகள் திங்களன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. நீண்ட இடைவெ ளிக்கு பிறகு பள்ளி வந்த மாணவர்கள், தங்களது நண்பர்களை கண்டு மகிழ்ச் சியடைந்தனர். மாணவர்கள் முகக்கவ சம் கட்டாயம் அணிந்து வர வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இத னால் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், கோவை மாவட்டத்தில் கோவை, எஸ். எஸ்.குளம், பேரூர், பொள்ளாச்சி ஆகிய 4 கல்வி மாவட்டங்களிலும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனி யார் பள்ளிகளில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக் கப்பட்டன. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தேவை யான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி  வைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங் கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் முதல் வாரத்தில் மாணவர்களுக்கான புத்து ணர்வு பயிற்சி, நல்லொழுக்கம், உளவி யல் ரீதியான வகுப்புகள் மட்டும் நடத் தப்பட உள்ளன. அடுத்த வாரத்திலி ருந்து வழக்கமான பாடங்கள் நடத் தப்படும். பள்ளிகளில் குடிநீர், கழிப் பறை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், பள்ளி களில் மாணவர் சேர்க்கையை அதிக ரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளியில்  கொரோனா வழிமுறைகளும் கடைப் பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன, என் றார்.  முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கோவை இராமநாதபுரம் பள்ளிக்கு சென்று மாணவர்களை வரவேற்று புத்தகங் களை பரிசளித்தார். இதேபோன்று இந்திய மாணவர் சங்கத்தினர் பல் வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி  வரவேற்றனர்.

;