districts

img

குப்பை மேடு அகன்று புத்தக குவியலாக மாறியது

சேலம், டிச.2- சேலம் புத்தக திருவிழாவின் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலை யில், பள்ளி மாணவர்கள் மாநக ராட்சி திடலில் குவிந்து வருகின் றனர். சேலம் மாவட்ட நிர்வாகம்,  தென்னிந்திய புத்தக விற்ப னையாளர்கள் மற்றும் பதிப்பாளர்  சங்கம் சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி தேர்தலில் சேலம் புத் தகத் திருவிழா கடந்த நவ.20 ஆம்  தேதி தொடங்கப்பட்டது. 210 அரங்குகளை கொண்ட இந்த கண் காட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்ட வரலாற்று சிறப்புமிக்க புத்த கங்கள் மற்றும் பல்வேறு எழுத்தா ளர்களின் படைப்புகள் இடம் பெற் றுள்ளன. 10 நாட்கள் வரை நடை பெற இருந்த இந்த புத்தகத்  திருவிழா, சேலம் மக்களின்  கோரிக்கையை ஏற்று டிச.4 ஆம்  தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட் டுள்ளது. இதனால், புத்தக கண் காட்சியில் காலை முதலே ஆயிரக் கணக்கான அரசு மற்றும் தனி யார் பள்ளி மாணவ, மாணவி கள் வருகை புரிந்தனர்.

அங்குள்ள ஒவ்வொரு அரங்கிற்கும் சென்று  வரலாற்று சிறப்புமிக்க புத்த கங்கள் மற்றும் எழுத்தாளர்களின்  படைப்புகள் என பல்வேறு புத்த கங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மேலும், பொதுமக்களும் காலை முதலே புத்தக கண்காட்சி யில் குவிந்து ஆர்வத்துடன் புத்த கங்களை வாங்கி வருகின்றனர். ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகளின் வருகையால் சேலம் புத்தக கண்காட்சி கலைக் கட்டி திருவிழாவை மிஞ்சும் அள விற்கு மக்கள் அலைமோதி வரு கின்றனர். சேலம் மாவட்டத்தில் நடை பெறும் இந்த புத்தக திருவிழா பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள பல சமூக ஆர்வலர்கள் தங்கள் முகநூல் பதிவில் “குப்பை மேடாக கிடந்த இடத்தை அறிவுப்பசி தீர்க்கும் புத்தக குவியல் இடமாக மாற்றிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி ” போன்ற பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

;