districts

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு முன்னாள் காவல் ஆணையருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

புதுதில்லி, மே 26-சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை நீர்த்துப் போகச் செய்ததாக ராஜீவ் குமார் மீது சிபிஐ குற்றம்சாட்டியது. கைதுநடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த போது ராஜீவ் குமார்உச்சநீதிமன்றத்திற்கு சென்றார். அவரைக் கைது செய்ய 7 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.தடையை நீட்டிக்கக் கோரிய போது, உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதை அடுத்து ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையை சிபிஐ தொடங்கியுள்ளது.அவர் வெளிநாடுகளுக்கு தப்பி விடக் கூடாது என்பதற்காக,லுக் அவுக் நோட்டீஸ் சிபிஐ பிறப்பித்துள்ளது. அதை விமானநிலையங்கள் மற்றும் சர்வதேச எல்லைப் பாதுகாப்பு முகமைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் ராஜீவ் குமாருக்குநெருக்கடி அதிகரித்துள்ளது. 

;