நாமக்கல், பிப்.23- பள்ளிபாளையம் வழியாக பாயும் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதப் பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள் ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப் பட்டு வந்த நீர், கடந்த ஜன.28 ஆம் தேதியன்று நிறுத்தப்பட்டதால், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் வழியாக பாயும் காவிரி ஆற்றில் நீர் குறைந்துள்ளது. பல்வேறு இடங் களில் கழிவுநீர் தேங்கியவாறு பாறை காடுகளாக காவிரி ஆறு தற்போது காட்சியளிக்கிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாத நிலையிலும் தொடர்ந்து பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதி முழுவதும் உள்ள சாய ஆலைகளில் இருந்து கழிவுநீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ள ஆற்றுநீரில் அதிகளவு கலந்து வருவதால், தண் ணீரில் ரசாயன அமிலத்தன்மை அதி கரித்து இருப்பதால், மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் ஆற்றில் கடு மையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், ஆற்றில் மீன்கள் அதிகளவு செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்கி வருகிறது. இந்நிலையில், கோடையில் குடிநீர் பற்றாக்கு றையை சமாளிக்கும் வகையில், காவிரி ஆற்றில் உள்ள நீரை பாது காக்கும் நடவடிக்கையில் அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டுமெனவும், காவிரி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவு நீரை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.