districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாட்டு சந்தையில் விற்பனை விறுவிறுப்பு

கோவை, மே 31- கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டு சந்தை நடைபெறும்.  அதன்படி செவ்வாயன்று நடைபெற்ற மாட்டு சந்தைக்கு  கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங் களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.  இங்கிருந்து கேரளாவிற்கு இறைச்சி தேவைக்காக மாடு களை வாங்கி சென்றனர். மேலும், உள்ளூர் விவசாய பணி களுக்கும் மாடுகளை விவசாயிகள் வாங்கி சென்றனர். இதற் கிடையில், பக்ரீத் பண்டிகை நெருங்குவதால், அடி மாடுகளின்  விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் கடந்த  வாரத்தை விட மாடுகள் வரத்து அதிகரித்து உள்ளது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி சந்தைக்கு  கடந்த வாரம் 2 ஆயிரம் மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு  வரப்பட்டன.  ஆனால், செவ்வாயன்று 2200 மாடுகள் வரை  விற்பனைக்கு வந்தன. கடந்த வாரத்தை விட கூடுதலாக 50  வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் நாட்டு பசு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை யும், காளை ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும்,  நாட்டு எருமை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும்,  மொரா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையும், செர்சி  ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்பனை யானது. 

மின்சார வாகன குறித்து பேரணி

தருமபுரி, மே 31- பாலக்கோட்டில் மின் சார வாகன பயன்பாடு  குறித்து விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள  வெள்ளிச்சந்தையில் மின் வாரியம் சார்பில் மின்சார வாகனம் பயன்பாடு குறித்து  விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் செல்வகுமார் தலைமை  வகித்தார். செயற்பொறி யாளர் வனிதா முன்னிலை வகித்தார். துணை மின் நிலையத்திலிருந்து வெள் ளிச்சந்தை, 4 ரோடு பகுதி  வரை வாகன பேரணி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்வாரிய பொறியா ளர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண் டனர். பேரணியின் போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், மின் சிக்கனம் குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.

கழிவுகளால் மாசடையும் தொப்பையாறு அணை

தருமபுரி, மே 31- துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் மாசடையும் தொப்பை யாறு அணையை பாதுகாக்க வேண்டும்  என கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், தொப்பூர்  அருகே மலைகளுக்கு இடையே தொப் பையாறு அணை அமைந்துள்ளது. தொப்பையாறு அணைக்கு நீராதார மாக தருமபுரி மாவட்ட பகுதிகள் மட்டு மல்லாமல் சேலம் மாவட்டம், ஏற்காடு  மலையிலிருந்தும் ஆறுகள் வழியாக  ஆனை மடுவு, பொம்மிடி வழியாக வேப்பாடி ஆற்றின் மூலம் தண்ணீர் தொப்பையாறு அணைக்கு வரு கிறது. தொப்பையாறு அணையில் இருந்து வலதுபுற மற்றும் இடது புற  வாய்க்கால்கள் மூலம் தருமபுரி மற்றும்  சேலம் மாவட்ட பகுதிகளில் தொப்பூர், கம்மம்பட்டி, மல்லிகுந்தம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் சுமார் 5330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பகுதிகளை ஒட்டியுள்ள மக்கள் மற்றும் பாசனப் பரப்பை ஒட்டியுள்ள மக்கள் அதிக அளவில் கால்நடைகளின் குடிநீர் தேவை மற்றும் விவசாய பணிகளுக்கு இந்த அணையையே நம்பி உள்ளனர். இவ்வாறு வருடம் முழுவதும் மலை களில் இருந்து வரும் தண்ணீரை பாசன  தேவைகள் மற்றும் குடிநீர் ஆதாரமாக  பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சமீப காலமாக இந்த அணைக்கு குளிப் பதற்காக வரும் பொதுமக்கள் மற்றும்  ஈம காரியங்கள் சடங்குகள் செய்வதற் காக வருபவர்கள், தாங்கள் அணிந்து  வரும் ஆடைகள் மற்றும் பிளாஸ்டிக்  கழிவுகள், குப்பைகள் உள்ளிட்ட வற்றை அணை பகுதியிலேயே அப் படியே வீசிவிட்டு செல்கின்றனர். தற் போது அணைப்பகுதி அதிகளவில் குப்பைகளும், ஆடைகளுமாக நிறைந் துள்ளது. வரும் மாதங்களில் மழை  பெய்யும் பட்சத்தில் அணை நிரம்பும் பொழுது இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் ஆடைகளோடு சேர்ந்து தண்ணீர் தேங்கும் நிலையில், நீர் மாசு பாடு அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால், அதற்குள் ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை நிர்வா கங்கள் இணைந்து அணைப்பகுதியில் குவிந்துள்ள குப்பை கழிவுகளையும்,  ஆடைகளையும் அப்புறப்படுத்தி அணையின் தூய்மையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தி உள்ளனர்.

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு இன்று தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, மே 31- தலைநகர் தில்லியில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக கோவையில் வியாழனன்று (இன்று) கண்டன இயக்கங்கள் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கோவை காட்டூரில் ஏஐடியுசி தலைமை சங்க அலுவல கத்தில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்ற கூட் டம் புதனன்று நடைபெற்றது. இதில் எல்பிஎப், ஐஎன்டி யுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, எம்எல்எப், ஏஐசிசிடியு, எஸ்டிடியு தொழிற்சங்க தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாநில செயலாளர் எம்.ஆறு முகம் தலைமை ஏற்றார். இதில், மல்யுத்த வீர்ர்கள் மீது பாலி யல் அத்து மீறலில் ஈடுபட்ட பாஜக எம்பியை ஒன்றிய மோடி  அரசு கைது செய்ய வேண்டும். நியாயம் கேட்டு போராடும் மல் யுத்த வீர்ர்கள் மீது காட்டு மிராண்டித்தனமாக கைது செய்த நடவடிக்கையை கண்டித்து போராட்ட இயக்கங்கள் நடத்து வது என முடிவெடுக்கப்பட்டது. ஜூன் 1 (இன்று) நாடு முழு வதும் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்பு கள் போராட்ட இயக்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் படி அகில இந்திய எதிர்ப்புதினம் கடைபிடிப்பது எனவும், பாலி யல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல் யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பி.,யுமான பிரிஜ் பூசன். சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி கோவை தலைமை தொலைபேசி நிலையம் முன்பு வியாழனன்று (இன்று) மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடி வெடுக்கப்பட்டது.  இக்கூட்டத்தில் எல்பிஎப் வி.ஆனந்த், வணங்காமுடி, ஏஐ டியுசி சி.தங்கவேலு, கே.எம்.செல்வராஜ், சி.சிவசாமி, ஐஎன்டி யுசி சண்முகம், மதியழகன், சிஐடியு மாவட்ட தலைவர் கே. மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்எப்  மு.தியாகராசன், எச்எம்எஸ் தேவராஜன், பி.டி.மோகன்ராஜ்,  ஏஐசிசிடியு க.பாலசுப்பிரமணியன், வெங்கடாசலம், எஸ்டி டியு முகமது ரபீன் உள்ளிட்ட திராளன நிர்வாகிகள் பங் கேற்றனர்.

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு: 13 பேர் காயம்

சேலம், மே 31- தம்மம்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி யில் 13 பேர் காயம் அடைந்தனர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை அடுத்த உலிபுரம் கிரா மத்தில் செவ்வாயன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதை ஆத்தூர் உதவி ஆட்சியர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். ஆனால், சில காளைகள் அவர்களுக்கு போக்கு காட்டி, பிடி படாமல் தப்பி சென்றன. காளைகள் சில களத்தில் நின்று, வீரர் களை மிரட்டின. ஆனாலும் காளைகளை கண்டு அஞ்சாத காளையர்கள், சீறிப்பாய்ந்த காளைகளை வீறுகொண்டு மடக்கி பிடித்து அசத்தினர். காளைகளை பிடித்த வீரர் களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் வீரர்கள் 9 பேரும், காளைகளின் உரிமையாளர்கள் 3 பேரும், பார்வையாளர் ஒருவரும் என 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் வேலுமணி தலைமை யிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். 65க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து 350 காளைகள் பங்கேற்றன. 166 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டை யொட்டி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

புகையிலை ஒழிப்பு தின பேரணி

சேலம், மே 31- புகையிலை பயன்பாடுகளில் இருந்து மக்களை பாது காக்கவும், புகையிலை பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் விதமாக 1981 ஆம் ஆண்டு முதல் மே 31 ஆம் தேதி உலக  புகையிலை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, புதனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் பல் மருத்துவக்கல்லூரி சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த  பேரணியை சுகாதாரத்துறை இணை இயக்குநர் கொடிய சைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி பெரியார் சிலை, திரு வள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவ மனை வழியாக மீண்டும் ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவு பெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் புகை யிலை நாள் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதா கைகள் ஏந்தியவாறு, 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வீட்டுமனை வாங்கித்தருவதாக மோசடி இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது

அவிநாசி, மே 31- பெருமாநல்லூர் அருகே வீட்டுமனை வாங்கித் தருவதாக கட்டட தொழிலாளியிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக, இந்து மக் கள் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்த னர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே உள்ள காளிபாளையம் குருவாயூ ரப்பன் நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் மஞ்சுநாதன் (33). கட்டடத் தொழிலாளி. இவ ரிடம் வீட்டுமனை வாங்கித் தருவதாக கடந்த  2020 ஆம் ஆண்டு, திருப்பூர் செட்டிபாளை யம், அய்யங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த, இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் பாலு (எ) உழைப்பாளி பூபாலு (57), ரூ.5 லட்சம்  பெற்றுள்ளார்.  இருப்பினும் 3 ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பி தரமாலும் ஏமாற்றி யுள்ளார். இதுகுறித்து மஞ்சுநாதன் அளித்த  புகாரின் பேரில், பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலு (எ) உழைப் பாளி பூபாலை செவ்வாயன்று கைது செய்த னர்.

வாகன ஓட்டிகளை வரவேற்கும் கொன்றை மலர்கள்

தருமபுரி, மே 31- தருமபுரி மாவட்டத்தில் சாலையோரங்களில் பூத்து குலுங்கும் கொன்றை மலர்கள் வாகன ஓட்டிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தருமபுரி  மாவட்டத்தில், சேலம் - தருமபுரி சாலை, தொழில் மையம், தொப்பூர் கணவாய் பகுதி, ஒகேனக்கல் செல்லும் சாலை, இதேபோல சேலம் - பெங்களூரு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை ஓரங்களிலுள்ள கொன்றை மரங்களில் தற்போது  கொன்றை பூக்கள் கொத்து கொத்தாக சிவப்பு நிறத்தில் பூத்து குலுங்குவது மனதை கவரும் விதமாக உள்ளது. மே மாதத்தில் மட்டுமே பூக்கும் பூக்கள் என்பதால், இதனை மே ப்ளவர்ஸ், கொன்றை மலர்கள், அலங்கார கொன்றை என்றும், சிவப்பு நிறத்தில் நெருப்பு போல இருப்பதால் அக்னி பூக்கள் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. முன்னோர் காலத்தில் வெற்றி வாகை சூடி வரும் மன்னரை கௌரவிக்கும் விதமாக இந்த பூக்களால் அலங்காரம் செய்யபட்டு வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சாலையோரங்களில் உள்ள கொன்றை மரங்களில் தற்போது சிவப்பு நிறத்தில் கொன்றை பூக்கள் பூத்து குலுங்குவது, அவ்வழியாக கடந்து செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை கவரும் விதமாக உள்ளது.

பலத்த மழைக்கு சாய்ந்த வாழை மரங்கள் நிவாரணம் கேட்டு விவசாயிகள் கண்ணீர்

உதகை, மே 31- பந்தலூர் அருகே பெய்த பலத்த மழைக்கு, அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங் கள் சாய்ந்தன. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள பிதர்காடு, பாட்டவயல், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று மாலை பலத்த மழை பெய்தது. ஆணையப்பன் சோலை, அய்யன்கொல்லி, மூலைக்கடை பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரம் விழுந் தன. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்ட தால், பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து மின்வா ரிய ஊழியர்கள் மின்கம்பங்களை சரிசெய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செருகுன்னு பகுதியில் ராமச்சந்திரன் என்பவரது வீட்டின் மீத மரம் விழுந்தது. இதில் மேற்கூரை சேதமடைந்தது. அதே பகுதியில் பலத்த காற்றுக்கு  தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை கள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி, அறுவடைக்கு தயா ரான வாழைகள் சாய்ந்ததால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, மே 31- தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடியில் செவ்வாயன்று பட்டுக்கூடு ஏலம் நடைபெற் றது. ஏலத்திற்கு 1,473 கிலோ  பட்டுக்கூடுகள் கொண்டு  வரப்பட்டன. இதில் ஒரு  கிலோ பட்டுக்கூடு அதிகபட்ச மாக ரூ.517க்கும், குறைந்த பட்சமாக ரூ.331க்கும், சரா சரியாக ரூ.413.84க்கும் விற் பனையானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 9 ஆயிரத்து 831க்கு வர்த்தகம் நடைபெற்றதாக ஏல அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.


 

;