திருவண்ணாமலை,பிப்.21- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா புளியம்பட்டி, ஆண்டிபட்டி, பக்கரி பாளையம், கட்டமடுவு, காயம்பட்டு, உள்ளிட்ட கிராமங்களில் பஞ்சமி நிலங்கள் சட்டவிதிகளை மீறி பிற சாதியினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன் னணி, மண்ணுரிமை கூட்டமைப்பு, மற்றும் டாக்டர் அம்பேத்கர் பேரவையின் சார்பில், செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்ணுரிமை கூட்டமைப்பின் செங்கம் பொறுப்பாளர் லட்சுமி, தலைமை தாங்கினார், மாவட்ட அமைப்பாளர் சி. ஏழுமலை, வழக்கறிஞர் எம். அண்ணாதுரை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டப் பொருளாளர் எஸ்.ராமதாஸ், சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ.லட்சுமணன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பர சன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர், செங்கம் வட்டாட்சி யரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரி, பல்வேறு மனுக்கள் அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சட்ட விதிகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, நிலமற்ற தலித் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுமென்று கோரிக்கை மனு அளித்துள்ளோம். இந்த மனுவின் மீதும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, டாக்டர் அம்பேத்கர் பேரவை, மண்ணுரிமை கூட்டமைப்பு, மற்றும் ஜன நாயக அமைப்புகளுடன், வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி நேரடி நில மீட்புப் போராட் டத்தை நடத்துவோம் என்று தெரிவித்தனர்.