districts

img

மக்கள் போராட்டம் எதிரொலி மூடப்பட்ட ரயில்வே கேட் மீண்டும் திறப்பு

பொள்ளாச்சி, ஆக. 5- பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் ரயில்வே  கேட் பொதுமக்களின் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீண் டும் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதால், பொதுமக்கள் பட்டாசு  வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி தெரிவித்த னர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் மேம்பாலம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. அந்த மேம்பாலத்தில் பொதுமக்கள் வெகு தூரம் பய ணிக்க சிரமம் ஏற்பட்டதால், பொதுமக்கள் வடுகபாளையம் ரயில்வே கேட் சாலையை பயண்படுத்தி வந்தனர். இந் நிலையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதியன்று ரயில்வே  நிறுவாகம் சார்பில் அந்த ரயில்வே கேட்டை மூடிவிட்டனர். இத னால், அவ்வழியே உள்ள 16 கிராம பொதுமக்கள் சென்று வர முடியாதவாறு சாலை துண்டிக்கப்பட்டது. குறிப்பாக, முத் தூர், தாளக்கரை, நலிக்கவுண்டம் பாளையம் செல்ல முடியா மல் தவித்தனர். இரண்டு கிலோமீட்டர் சுற்றி தங்களது கிரா மங்களுக்கு பொதுமக்கள் செல்லும் சூழ்நிலை உரு வானது. இதையடுத்து பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் சார் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் மீண்டும் ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை பற்றி தீக்கதிர் நாளிதழிலும் விரி வான செய்தி வெளிவந்தது. இதைதொடர்ந்து, ரயில்வே துறை அமைச்சர் அஸ் வினை, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வர சாமி சந்தித்து ரயில்வே கேட் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரவேண்டும் என மனு அளித்தார். அத னைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம்  உடனடியாக தலை யிட்டதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் ரயில்வே  கேட் திறக்கப்பட்டது.  இதனால், அப்பகுதி பொதுமக்கள் பட் டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச் சியை தெரிவித்தனர்.