districts

img

“மனித உரிமை போராளிகளை விடுதலை செய்” மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் வெகு மக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை, செப்.14-  

மனித உரிமை போராளிகளை விடுதலை செய்யக்கோரி செப்.15 ஆம் தேதியன்று நடைபெற உள்ள மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு வெகு மக்கள் திரளாக பங்கேற்றிடு மாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கோவை காந்தி புரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப் பில் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் கூறுகையில், பீமா கோரேகானில் 200 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து மனித உரிமைப் போரா ளிகள் மீது ஒன்றிய பாஜக அரசு வழக்கை பதிவு செய்தது.

எந்த குற்ற முகாந்திரமும் இல்லாத நிலையில் கொடூரமான ‘உபா’ (UAPA) சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தது. இதில், சிறையில் இருந்த அருட்தந்தை ஸ்டான் சுவாமி, உரிய மருத்துவ சிகிச்சை இன்றி  சிறையி லேயே உயிரிழந்தார்.  மேலும், தற் போது வரை கைது செய்யப்பட்ட 15  பேர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

 இவர்கள் அனைவரும் அறி வார்ந்த ஆளுமைகள், மக்களுக் காக பேசிய மனித உரிமை போரா ளிகள்,  எழுத்தாளர்கள், சமூக செயற் பாட்டாளர்கள். எவ்வித குற்ற மற்ற இவர்கள் மீது ஒன்றிய பாஜக அரசு  திட்டமிட்டு உபா சட்டத்தை ஏவியுள் ளது.  இது திட்டமிட்ட சதி என நிரூ பிக்கப்பட்டது. இருப்பினும் தற் போது வரை  பிணை கூட வழங்கா மல் ஒன்றிய பாஜக அரசு கொடு மைப்படுத்தி வருகிறது. இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய  வேண்டும் என்கிற முழக்கத்தை  முன்வைத்து தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் ஒருங்கிணைப்பில், பீமா கொரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில், சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என சர்வதேச ஜனநாயக தினமான செப். 15 தேதியன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம்  நடை பெறவுள்ளது.

மனித உரிமைக்கான இந்த மகத் தான மனித சங்கிலியில்  மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தபெதிக, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட 23 அமைப்புகள் பங் கேற்க உள்ளது. கோவையில் காந்தி புரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்புற மிருந்து செப்.15 (புதனன்று) மாலை 4.30 மணிக்கு நடைபெறும் மனித சங்கிலி இயக்கத்தில் ஜனநாயக உரி மையை பாதுகாக்க, ஒன்றிய அர சின் மக்கள் விரோத நடவடிக் கையை அம்பலப்படுத்த வெகுமக் கள் திரளாக பங்கேற்க வேண்டும் என பி.ஆர்.நடராஜன் எம்.பி., கேட் டுக்கொண்டார்.

முன்னதாக, இந்த செய்தியாளர் சந்திப்பில் தபெதிக பொது செய லாளர் கு.இராமகிருட்டிணன், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், திராவிட தமிழர்  கட்சியின் தலைவர் வெண்மணி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக் கத்தின் அஷ்ரப்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;