districts

img

ரெட் ரன் விழிப்புணர்வு மாரத்தான்

திருப்பூர், ஆக.31- தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில்  சனியன்று திருப்பூரில் ரெட் ரன் மாரத்தான் போட்டி நடை பெற்றது. எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான ரெட் ரன் மாரத்தான் போட்டியில், சிக்கண்ணா அரசு கலைக்  கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்  பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்களை யும், பெண்கள் பிரிவில் மூன்று ஆறுதல் பரிசுகளையும் சிக் கண்ணா கல்லூரி மாணவ, மாணவிகள் பெற்றனர்.