districts

img

கீழே இறங்கியுள்ள தண்டவாளங்களை சரி செய்திடுக

சேலம், பிப்.14- கீழே இறங்கியுள்ள ரயில் தண்ட வாளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர் சங்கத்தி னர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் ஜங்சன் ரயில்வே கூட்செட் டில் 300க்கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள், தினசரி ரயில்களி லிருந்து மூட்டைகளை ஏற்றி, இறக் கும் பணிகளை செய்து வருகின்றனர். இந்த கூட்செட்டிற்கு சிமெண்ட், உரம், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் என அனைத்து மூட்டைகளும் வரு கின்றன. இந்நிலையில், எலிகள் தண் டவாளத்திற்கு அடியில் மண்ணை துளையிடுவதால், கற்கள் சரிந்து, தண்டவாளம் கீழே இறங்கி உள் ளது. நடைமேடையிலிருந்து மூட்டை களை தூக்கிக்கொண்டு லாரிக்கு வேகமாக ஓடும்போது, தண்டவாளத் தில் கால்கள் சிக்கி, விபத்துகள் ஏற் படுகிறது. இதனை தடுக்க கீழே  இறங்கியுள்ள தண்டவாளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி, சிஐடியு ரயில்வே ஏற்றுமதி, இறக்குமதி தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் ரயில்வே கோட்ட மேலா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் ஆர்.வெங்கடபதி தலைமை வகித்தார். இதி சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன், மாவட் டத் தலைவர் டி.உதயகுமார், சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் பிரபு, நிர்வாகிகள் சக்தி வேல், மதியழகன், கே.எம்.மாரி முத்து, கோவிந்தராஜ், சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.