districts

img

கோவை: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை, ஜன.22- கோவை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டார்.  கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட்டது. மாவட்ட ஆட்சியர்  கிராந்திகுமார் பாடி அங் கீரிக்கப்பட அரசியல் கட்சி நிர்வாகி கள் முன்பு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.  சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வாக்கா ளர் பட்டியல் பெயர் சேர்த்தல், பெயர்  நீக்குதல் மற்றும் திருத்தத்திற்கான முகாம்கள் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து நடைப்பெற்று வந்தது. இந் நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சி பிரமுகர்கள் முன்பு பட்டிய லானது வெளியிடப்பட்டது.  இறுதி வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் 15 லட் சத்து 9 ஆயிரத்து 906 ஆண்களும், 15 லட்சத்து 71 ஆயிரத்து 93 பெண்க ளும், மற்றும் மாற்றுப் பாலினத் தவர் 595 ஆக மொத்தம் 30 லட்சத்து  81ஆயிரத்து 594 வாக்காளர்கள் மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்ற  தொகுதிகளின் வாக்காளர் எண் ணிக்கையாக உள்ளது. அதிகபட்ச மாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற  தொகுதியில் 4 லட்சத்து 62 ஆயி ரத்து 612 வாக்காளர்களும், குறைந் தபட்சமாக வால்பாறை தொகுதி யில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 503  பேர் கொண்ட தொகுதிகளாக உள் ளது.