ஈரோடு, மார்ச் 24- ஈரோடு மாவட்ட வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2023-24-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நடை பெற்றது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த குமார் வரவேற்றார். இக்கூட்டத்தில் 2023-24-ஆம் ஆண்டிற் கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், ஈரோடு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தும் வகையில் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மைத் துறை, மீன்வளத்துறை, கைத்தறித் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்களுக்கு கடன் இலக்கு ரூ.16 ஆயிரத்து 30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயத்திற்கான கடன் இலக்கு ரூ.8 ஆயிரத்து 815 கோடியாகும். சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் இலக்கு ரூ.5 ஆயிரத்து 465.26 கோடிகள், பிற முன்னுரி மைகளுக்கான கடன் இலக்கு ரூ.1,596.48 கோடிகளாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இந்த கடன்களை தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போதுதான் அரசுத் துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப் பங்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டு கடன்களை வழங்கிடவும், குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படு கின்ற பயிர்கடன் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர் களுக்கு வழங்கப்படுகின்ற கடன்கள் வழங்குவதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காமலும், முன்னுரிமை அடிப் படையில் கடன் வழங்கிட வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதில், மாவட்டத் தொழில்மையத்தின் மேலாளர் மருதப்பன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் டி.அசோக்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர், ரிசர்வ் வங்கி மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.