districts

img

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்கிடுக

தருமபுரி, ஜூலை 20- நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அக விலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி,  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற் றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மின்வாரிய ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஜன.1 முதல் மே 31 ஆம் ஆம் தேதி முடிய  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 4 சதவி கித அகவிலைப்படியை உடனடி யாக வழங்க வேண்டும். புதிய மருத் துவ காப்பீடு திட்டத்தின்படி, காப் பீடு நிறுவனத்திடம் பணப்பயன் களை முழுமையாக வழங்க வேண் டும். விதவை மகள், விவாகரத்தான வர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட் டுள்ள குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். ஊதிய உயர் வின் அடிப்படையில் ஓய்வு பெற்ற வர்களுக்கு பணப்பயன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனி யன்று தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். இதில்  மாவட்டச் செயலாளர் ஜி.பி.விஜ யன், பொருளாளர் எம்.சின்னசாமி, துணைத்தலைவர் ஆர்.ரகுபதி, அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாநில  துணைச்செயலாளர் கே.குப்புசாமி  உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை மாவட்ட மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு, தமிழ்நாடு மின் வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கிளைத் தலைவர் ஞானப்பிரகாசம் தலைமை வகித் தார். கிளைச் செயலாளர் ப.விவே கானந்தன், மண்டலச் செயலாளர்  ஆர்.ஆர்.சுந்தரேசன், இணைச் செயலாளர் சி.வி.மீனாட்சி சுந்தரம்,  பாலக்காடு கிளைச் செயலாளர் பி. ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். மின்ஊழியர் மத்திய அமைப்பின் மண்டலச் செயலாளர் டி.கோபால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். முடிவில், பொருளாளர் கே.ராமச் சந்திரன் நன்றி கூறினார்.