districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி உடலை எடுக்க மறுத்து போராட்டம்

உதகை, ஜன.30- ஓவேலியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரி ழந்த நிலையில், காட்டு யானையை பிடிக்க வேண்டும் என  வலியுறுத்தி உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சி, சீபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் குட்டி. இவரது மகன் நவுஷாத் (38). இவர் தனியார் எஸ்டேட்டில் பணியாற்றி வந்த நிலையில், காபி காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் அதே  பகுதியைச் சேர்ந்த ஜமால் (28) என்பவரும் சென்றார். அப் போது அதே பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்று திடீரென அவர்களை துரத்தியது. இதை சற்றும் எதிர்பாராத நவுஷாத், ஜமால் ஆகியோர் தப்பியோடினர். இருப்பினும்  காட்டு யானையிடம் நவுஷாத் சிக்கி, சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களுடன் ஜமால் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதனி டையே போலீசார், வனத்துறையினர் விரைந்து வந்து நவு ஷாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற் காக வந்தனர். ஆனால், உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் 2 ஆம் நாளாக ஞாயிறன்றும் தொடர்ந்து நடைபெற்றது.  இதனிடையே முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் சீபுரத்துக்கு வனத்துறைக்கு சொந்தமான லாரி யில் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் காட்டு  யானையை விரட்டும் பணி நடைபெற்றது. இதன்பின் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், கோட்டாட்சியர் முகமது குதரதுல்லா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நிவாஸ், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உள்ளிட்ட அதி காரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உயிரிழந்த நவுஷாத் குடும் பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, நவுஷாத் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

கட்டைப் பையில் கிடந்த குழந்தை மீட்பு

சூலூர், ஜன.30- அன்னூர் அருகே பிறந்து 2 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் சாலை யோரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள சாணம்  பாளையம், கட்டபொம்மன் நகரில் திங்களன்று, அதிகாலை  தூய்மை பணியாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சாலையோரம் குப்பை தொட்டிக்கு அருகே கட்டைப்பை ஒன்றில் குழந்தை அழும் சத்தம் கேட் டுள்ளது. சந்தேகமடைந்த தூய்மை பணியாளர்கள் கட்டைப் பையை திறந்து பார்த்தபோது, அதில், பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி அகற்றாத நிலை யில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர்கள், குழந் தையை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம்  அன்னூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அன்னூர் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு, பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்தநிலையில் சுற்று வட்டாரத்தில் அரசு மகப்பேறு சிகிச்சை மையங்களில், 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை களின் பட்டியலை அன்னூர் போலீசார் சேகரித்து வருகின்ற னர். குழந்தை ஏன் சாலையில் வீசப்பட்டது என்பது  குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலை வேலையில் சாலையோரம் தொப்புள் கொடி கூட அகற்றப் படாமல்  குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானை பார்த்து பயந்த பெண்: கை முறிவு

கோவை, ஜன.30- கோவை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட் பட்ட மானாம்பள்ளி வனச்சர கத்தை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் முதல் பிரிவில் வசித்து வரும் வடமாநில பெண் லீல்முனிகிஸ் (48).  இவர் அப்பகுதியிலுள்ள 12 ஆம் நம்பர் காட்டுப்பகுதி யில் உள்ள சோலைப் பகு திக்கு விறகு எடுக்கச் சென்ற போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த யானையை பார்த்து பயந்து ஓடியதால் கீழே விழுந்து இடது கை  முறிவு மற்றும் முகப்பகுதிக ளில் காயம் ஏற்பட்டது. இத னையறிந்த அப்பகுதியில் உள்ள மக்கள் வனத்து றைக்கு தெரிவித்தனர். இத னையடுத்து அவரை மீட்டு  கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர்கள் சாதனை

திருப்பூர், ஜன.30- சிலம்பம் பயிற்சி மையத் தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் இந்திய வரை பட வடிவில் நின்று சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் திருப்பூர், கோவை  மற்றும் வேலூர் ஆகிய மாவட் டங்களில் இருந்து 300 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு இந்திய வரைபட வடிவில் நின்றபடி தொடர்ச்சியாக 6 வகையில் சுமார் 20 நிமிடங்கள் 23 விநா டிகள் சிலம்பம் சுற்றினர். இந்நிகழ்வு  இந்தியன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்வில் இடம் பெற்றுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் இருவர் கைது

திருப்பூர், ஜன.30 – திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகே திலகர் நகரில் ரியா  பேஷன்ஸ் பனியன் கம்பெனி அருகே கடந்த 14ஆம் தேதி இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் அ.ரஜத்குமார் (24),  பரேஷ்ராம் (27) ஆகிய இருவரை காவல் துறையினர் திங்க ளன்று கைது செய்துள்ளனர்.  இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தனிப்படையி னர் தேடி வருவதாகவும் மாநகர காவல் துறை செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர் பாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்சாப் குழுக்களில் தவ றான பதிவுகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

சின்டெக்ஸ் திருடனை பிடிக்க கோரி டாஸ்மார்க்  கடை முன்பு பெண்கள் அமர்ந்து போராட்டம்

அவிநாசி, ஜன.30 – அவிநாசி அருகே கருவலூரில் ஞாயிறன்று  சின்டெக்ஸ்  டேங்க் திருடிய குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  டாஸ்மாக் கடை முன்பாக பெண்கள் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம் ராமநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட  நரி யம்பள்ளி பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவிலில் சின் டெக்ஸ் டேங்க் மோட்டாரை சில தினங்களுக்கு முன்பாக  திருடிச் சென்றுள்ளனர். இதில் நரியம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் கருவலூர் அருகே செயல்பட்டு வரும்  டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க வந்துள்ளனர். அப்பொ ழுது மாகாளியம்மன் கோவிலில் திருடப்பட்ட சின்டெக்ஸ் டேங்க் டாஸ்மார்க் கடையில் இருந்துள்ளது. இந்த நிலையில்  சின்டெக்ஸ் டேங்க் குறித்து, டாஸ்மார்க் கடையில் விசாரித்த  போது தின்பண்டங்கள் விற்கும் பார்களில் விசாரிக்குமாறு கூறியுள்ளனர். இதுகுறித்து பார் நிர்வாகத்தினர் அப்பகு தியைச் சேர்ந்த பொதுமக்களிடம், ரமேஷ் என்ற நபர் ஆயிரம்  ரூபாய் விலைக்கு விற்பனை செய்துள்ளார் எனக்கூறி யுள்ளனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பார் உரி மையாளர் குட்டியிடம் சின்டெக்ஸ் டேங்க் மாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதனை கொடுக்குமாறு கேட் டுள்ளனர். இதற்கு பார் உரிமையாளர் புதிதாக வேறு சின் டெக்ஸ் டேங்க் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இருப்பி னும் பல நாட்கள் கடந்தும் பார் உரிமையாளர் குட்டி முறை யாக பதிலளிக்காததாலும், திருடப்பட்ட நபரை அடையாளம்  காண்பிக்காததாலும், ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பெண்களும் டாஸ்மார்க் கடை  முன்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த அவிநாசி  காவல் துறையினர், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவ தாக கூறியதை தொடர்ந்து, பெண்களும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் கலைந்து சென்றனர்.

புத்தகத் திருவிழாவில் இன்று மாணவர் பரிசளிப்பு விழா

திருப்பூர், ஜன.30 – 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் மாணவ,  மாணவியர் திறனாய்வுப் போட்டியில் தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு செவ்வாயன்று பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. காங்கேயம் சாலை வேலன் ஹோட்டல் மைதானத்தில் புத் தகத் திருவிழா மேடையில், மாலை 6 மணிக்கு திருப்பூர்  சார் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் தலைமையில் இவ் விழா நடைபெறுகிறது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி திருப்பூர்  மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்க ளுக்கான திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட் டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்த மேடை யில் பரிசளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசளிக்கின்றனர்.

முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம்

அவிநாசி, ஜன.30 – அவிநாசி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1960ஆம் ஆண்டு  பயின்ற முன்னாள் மாணவர் கல்வி அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது  இதில், அறக்கட்டளைத் தலைவர் பொறியாளர் பாலகி ருஷ்ணன் தலைமையில், செயலாளர் நடராசன், பொருளா ளர் கணேஷ், துணைத் தலைவர் சண்முகசுந்தரம், துணைச்  செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநிலத் தலை வர் செ.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சி யில் பல்வேறு பகுதிகளில் இருந்து, 80 வயதைக் கடந்த  முன்னாள் தலைமையாசிரியர்கள், முன்னாள் ஆசிரியர் கள், வழக்குரைஞர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு  துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 100க்கும் மேற்பட்டவர் கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1000 பேர் அமரத்தக்க வகையில் உள்ளரங்கு மற்றும் விழா  மேடையுடன் கூடிய கலையரங்கம் அமைத்தல், நீட், ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி போன்ற சிறப்பு பயிற்சிகள் வழங்குதல், அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்.கே.நகர் பகுதியில் மின்தடை

அவிநாசி, ஜன.30 - அவிநாசி மின்கோட்டம் ஆர்.கே.நகர் துணை மின்நிலை யத்தில் பிப்.1 ஆம் தேதி உயரழுத்த மின் பாதையில் மின்  கம்பிகளை மாற்றும் பணிகள் நடைபெறுகின்றது. எனவே தொட்டிமண்ணரை, எம்.ஜி.ஆர்.நகர், ரோஜா நகர், நல்லாத் துப்பாளையம் ஆகிய பகுதிகளில், பிப்.1 ஆம் தேதி காலை  9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் தடை படும் என்று அவிநாசி மின்கோட்டப் பொறியாளர் பரஞ்சோதி  தெரிவித்துள்ளார்.

படைப்புகளை மறைக்க முடியாது: சு.வெங்கடேசன் எம்.பி., பேச்சு

திருப்பூர், ஜன.30 - அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதி ரான புத்தகங்களையோ, ஆவணப்படங்க ளையோ மறைக்கும் முயற்சி எல்லா காலத்தி லும் நடந்து வருவகிறது. ஆனால் அவற்றை  ஒருபோதும் மறைக்க முடியாது என்று தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில கௌரவத் தலைவரும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பின ருமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் கூறி யுள்ளார்.  தமிழ்நாடு அரசு திருப்பூர் மாவட்ட நிர்வா கம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தி வரும் 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ஞாயிறன்று நடந்த கருத்தரங்கில் சு.வெங்கடேசன், ‘சரித்திரத் தேர்ச்சி கொள்’ என்ற தலைப்பில் பேசி னார். அப்போது அவர் கூறுகையில், சமூ கத்தை பயிற்றுவிக்கும் மகத்தான பங்களிப்பு  அரசு நிர்வாகத்துக்கு உண்டு. அதற்கு உதா ரணம் இந்த புத்தக கண்காட்சி. அரிஸ்டாட் டில், கன்பூசியஸ், அர்த்தசாஸ்திரம் மற்றும்  திருக்குறளை படியுங்கள். இந்த புத்தகக் கண் காட்சி மேடை என்பது, அறிவின் திறந்த வாசல். அரிஸ்டாட்டில், கவுடில்யர் தொடங்கி  மனிதர்களை, மனித சமூகத்தை எப்படி மேலாண்மை செய்ய வேண்டும் என எழுதி னார்கள். படை, கோட்டை, உளவுப் பிரிவை  எப்படி உருவாக்க வேண்டும்

என பல நூல்கள்  எழுதப்பட்டன. மனித மனதை எப்படி அறவ ழியில் நடத்துவது என பிரதானப்படுத்தியது திருவள்ளுவர் தான். மேலாடை அணியத் தொடங்கிய காலம், மனித சமூகம் நாகரீகம் தொட்ட காலம். அந்த ஆடைக்கு சங்க  இலக்கியத்தில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  12 சொற்கள் தமிழில் மட்டுமே உள் ளது. இந்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. கடலில் செலுத்தப்படும் வாகனத்துக்கு 24 சொற்கள் உண்டு. நொய்யல் நதிக்கரையின் கொடுமணலில் கண்டுபிடிக்கப்பட்டவையும், கரூரில் கண்ட றியப்பட்டவையும், புகளூரின் கண்டறிப்பட் டவையும் தமிழ்ச் சமூகத்தின் பெரிய அடை யாளம். மூங்கிலை வெட்டினால், கண்ணும்  தெரிந்தும், தெரியாமலும் ஒரு வெள்ளாடை இருக்கும். இந்த ஆடையை சங்க இலக்கி யம் சொல்கிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியம் எழுதியவர்கள் நம் பெண் கள். 40-க்கும் மேற்பட்ட பெண்கள் எழுதிய  பெண் படைப்பாளிகள் எழுதியது இலக்கிய வரலாறு. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக வெளியிடப்படுகின்ற புத்தகங் களோ, ஆவணப் படங்களையும் மறைப்பது  அனைத்து காலத்திலும் நடைபெற்று வருகி றது. ஆனால் அவற்றை ஒரு போதும் மறைக்க  முடியாது என வரலாறுகள் நமக்கு நினை வூட்டுகின்றன இவ்வாறு அவர் பேசினார்.

திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது

அவிநாசி, ஜன.30 – அவிநாசி பகுதியில் பல் வேறு வழிப்பறி, திருட்டு  வழக்குகளில் தொடர்புடை யவரை போலீசார் ஞாயி றன்று கைது செய்தனர். அவி நாசி புதிய பேருந்து நிலை யம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது சந்தே கத்திற்கு இடமாக நின்றி ருந்தவரை போலீசார்  பிடித்து விசாரணை மேற் கொண்டனர். கரூர் பெரிச்சி பாளையம் கோதூர் சாலை யைச் சேர்ந்த பெருமாள் மகன் ஆறுமுகன் (எ) ராஜா  (42) என்ற அந்த நபர், பல் வேறு வழிப்பறி, திருட்டு  வழக்குகளில் தொடர்புடை யவர் என்பது தெரியவந்தது.  இதையடுத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். 

தொழு நோய் விழிப்புணர்வு கூட்டம் 

தொழு நோய் விழிப்புணர்வு கூட்டம்  தருமபுரி, ஜன.30- தேச ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் பாடுபட்ட மகாத்மா காந்தி 76 ஆவது நினைவு தினத்தை முன் னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்புத் தினம் மற்றும் விழிப் புணர்வு இயக்கம் இரு வார காலங்கள் பாலக்கோடு வட்டாரம் முழுவதும் நடைபெற உள்ளது.   பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத் துவ அலுவலர் மரு.சிவகுரு மற்றும் பாலக்கோடு, அரசு மருத் துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் மரு.பால சுப்பிரமணியன் ஆகிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேர ணியை துவக்கி வைத்தனர்.  இதில், பல்வேறு தேமல் குறித்து விளக்கியும், “தொழுநோயை வென்று சரித்திரம் படைப் போம்” என இந்த ஆண்டின் செயல் திட்டம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

பட்டாசுகளை பதுக்கி விற்பனை செய்த 4 பேர் கைது

கோவை, ஜன.30- கோவை மாவட்ட புறநகர் பகுதிகளில், பட்டாசுகளை பதுக்கி வைத்து, விற்பனையில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள கடைகளில் பாதுகாப்பற்ற முறையில் ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆனைமலை போலீசார் வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு டிபார்ட் மெண்ட் ஸ்டோரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சரவெடி உள்பட பல்வேறு வகை பட்டாசுகள் 61 பெட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ஆனைமலை  போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசை பதுக்கி விற்ற வேட்டைகாரன்புதூரை சேர்ந்த உதயகுமார் (47) என்பவரை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.57,100 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, ஆனைமலை, மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பேன்சி கடையில் சோதனை செய்தனர். அங்கு ரூ.26,620 மதிப்புள்ள பட்டாசுகள் 64 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்தனர். இதனை போலீசார் கைப்பற்றி விற்பனையில் ஈடுபட்ட பேன்சி கடைகாரர் அண்ணாமலை (51) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று,  மேட்டுப்பாளையம் காரமடையில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர். அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 55 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தனர். ஊட்டி சாலையில் உள்ள மளிகை கடையில் ரூ.20  ஆயிரம் மதிப்புள்ள 75 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரமடையை சேர்ந்த குமரேசன் (48) மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவநாத் (52) ஆகியோரை கைது செய்தனர். ஒரே நாளில் பட்டாசுகளை பதுக்கி விற்ற  4 பேரை போலீசார் கைது செய்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 720 மதிப்புள்ள 255 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

படையெடுக்கும் காட்டுயானைகள்

ஈரோடு, ஜன.30- ஈரோடு மாவட்டம், தாள வாடி அருகே ஜீர்கள்ளி வனச் சரகத்துக்கு உள்பட்டது அருள் வாடி கிராமம். இது தமிழக - கர்நாடக எல்லையில் அமைந் துள்ளது. இந்நிலையில், கர் நாடக வனப்பகுதியிலிருந்து 20க்கும் மேற்பட்ட யானை கள் வெளியேறின. பின்னர் அவை தமிழக வனப்பகுதி யையொட்டி உள்ள அருள் வாடி கிராமம் அருகே உள்ள  மானாவாரி நிலத்தில் புகுந் தது. இதனால் விவசாயிக ளும், பொதுமக்களும் பாது காப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர்  அறி வுறுத்தியுள்ளனர்.

மயானப்பாதை கேட்டு தலித் மக்கள் மனு

தருமபுரி, ஜன.30- மயானத்திற்கு செல்ல பாதை கேட்டு அம்பேத்கார் காலனி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதள்ள ஊராட்சிக்குட்பட்ட  ஜருகு அம்பேத்க காலணி உள்ளது. இந்த கிராமத்திற்கு 40  சென்ட் இடத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல் லக்கூடிய வழிதடத்தினை காலம் காலம்மாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் தனி நபர் ஒருவர், தனது சுய லாபத் திற்காக மயானத்திற்கு சென்று வரும் இந்த வழிப்பாதையை, வேறு வழியாக சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய முயற்சித்து வருகிறார். தங்களது முன்னோர்கள் காலத்தில் இருந்து தற்போது வரை பயன்படுத்தி வந்த வழித்தடத்தை, எவ் வித இடையூறுமின்றி மயானத்திற்கு சென்று வர நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

போக்சோ சட்டத்தில் சிறுவன் மீது வழக்கு 

உதகை, ஜன.30- சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பமடையச் செய்த 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், மசினகுடியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் 17  வயது சிறுவன், ஒரே பள்ளி என்பதாலும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த 17 வயது சிறுவன், சிறுமியி டம் ஆசைவார்த்தை கூறி மசினகுடி தொட்டலிங்கி பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுவன், சிறுமியை பாலி யல் வல்லுறவு செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனிடையே வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமி, உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. மருத்துவர்கள், விசா ரித்த போது குழந்தையின் தாய் சிறுமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் மசினகுடி போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிறு மியிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது  சிறுமி நடந்தவற்றை கூறினார். பின்னர் புகார் அளித்தார். புகா ரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





 


 

;