districts

img

உடுமலை நகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு?

உடுமலை, மே 15- உடுமலைப்பேட்டை நகராட்சி யில் பல கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி,  குற்றவாளிகள் மீது முதல் தகவல்  அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என அறப் போர் இயக்கம் வலியுறுத்தி உள் ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  உடுமலைப்பேட்டை நகராட்சி இயக் குநர், ஊழல் தடுப்பு இயக்குநர் ஆகி யோருக்கு அறப்போர் இயக்கம் சார் பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில்  கூறியிருப்பதாவது: உடுமலைப் பேட்டை நகராட்சியில் ஊழல் நடை பெற்றுள்ளது என புகார் எழுந்த  நிலையில், உள்ளாட்சி நிதி தணிக்கை  இயக்குநரின் அறிவுதலின்படி, 2013 -  14 முதல் 2018 - 19 வரையிலான காலத் தின், நகராட்சி கணக்குகள் மறுத ணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப் பணி நிறைவுற்று, அந்த அறிக் கையை கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன்  15 ஆம் தேதியன்று நகராட்சி நிர்வாக  இயக்குநர் - சென்னை, உடுமலை பேட்டை நகராட்சி ஆணையர், நக ராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் -  திருப்பூர், உள்ளாட்சி தணிக்கை  உதவி இயக்குநர் - திருப்பூர் உள் ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. மேலும், தகவல் கேட்டறியும் சட்டத்தின் மூலம் மறு தணிக்கை அறிக்கை நகலை பெற்ற  அறப்போர் இயக்கம், அதன் நடவ டிக்கையின் நிலையை தொடர்ந்து அறிய விண்ணப்பித்திருந்தது.

அதில் மறுதணிக்கை அறிக்கை  அனுப்பி சுமார் இரண்டு ஆண்டுகள்  ஆகிய நிலையில், தற்போது வரை  குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்ப டவில்லை. மேலும், குற்றத்தில் சம்பந் தபட்ட நபர்களில் ஒருவர் மட்டும் தற் காலிக பணி நீக்கத்தில் இருப்பதாக தெரிகிறது, வேறு எந்த ஊழியர்கள் மீதும் துறை ரீதியிலான ஒழுங்கு நட வடிக்கையோ அல்லது குற்றவியல்  நடவடிக்கையோ மேற்கொள்ள வில்லை என தெரிகிறது. எனவே லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, முதல் தகவல் அறிக்கை பதிய அரசு உடனே அனுமதி தர வேண்டும். நக ராட்சி உதவியாளராக இருந்த கண் ணன் என்பவர் மற்றும் 2013-14 முதல்  2018 - 19 வரையிலான காலகட்டத்தில்  நகராட்சி உயர்மட்ட அதிகாரிகளாக இருந்தவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். குற்றத் தில் ஈடுபட்ட அல்லது துணை புரிந்த வர்கள் அனைவர் மீதும் முதல்  தகவல் அறிக்கை பதிந்து குற்றவியல்  நடவடிக்கை மற்றும் துறை ரீதியான  ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மறுதணிக்கை அறிக்கை மூலம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் இழப்பு, முறைகேடு மற்றும் ஊழல் வகையில் தொகை ரூ.12,85,87,209 கோடியும், நிர்வாக கணக்கில் குறை பாடு வகையில் ரூ.3,96,01,956 தொகையும், மொத்தமாக ரூ.16,81, 89,165 ல், உரிய தொகை சம்பந்தபட்ட வர்களிடம் இருந்து மீட்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.