districts

காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி கேட்டு மனு

தருமபுரி, ஜூன் 22- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரி சல் இயக்க அனுமதி கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற் கான ஒப்பந்த ஏலமானது கடந்த சில நாட்களுக்கு முன் பென்னாகரம் வட் டார வளர்ச்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இதில் புதிதாக சேவைக் கட் டண வரி பதிவு வைக்கப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், பரிசல் ஓட்டிகள் ஒப்பந்த இடத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பரிசல் ஓட்டிகள், மாவட்ட ஆட் சியரிடம் ஒப்பந்த ஏலத்தில் கலந்து  கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்  என கோரிக்கை விடுத்தனர். இந்நிலை யில், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரை யின் பெயரில் மறு ஏலம் விடப்பட உள் ளது. இதனிடையே, காவிரி ஆற்றில் பரி சல் இயக்குவதற்கு உரிய அனுமதி அட்டையுடன் 450க்கும் மேற்பட்ட பரி சல் ஓட்டிகள் உள்ளனர். தற்போது நடை பெற உள்ள பரிசல் இயக்க ஒப்பந்த ஏலத்திற்கு அனைத்து பரிசல் ஓட்டி களும் தலா ரூ.50 ஆயிரம் தர வேண்டும்  என அதிமுக மற்றும் திமுக நிர்வாகி கள் கேட்பதாகவும், தராவிடில் பரிசல் இயக்க அனுமதிக்க முடியாது என கூறப் படுவதால், கடந்த 3 நாட்களுக்கும் மேலாக 20க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டி கள் பரிசல் இயக்காமல் உள்ளனர். மேலும், பரிசல் இயக்க வந்தாலும் அனு மதி மறுக்கப்படுகிறது. எனவே, எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் காவிரி  ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என பரிசல் ஓட்டி  ஒருவர் பென்னாகரம் வட்டார வளர்ச்சி  அலுவலரிடம் மனு அளித்துள்ளார். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட வட் டார வளர்ச்சி அலுவலர், இதுகுறித்து பரிசல் ஓட்டிகள் சங்க நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிப்பதாகத் தெரிவித் துள்ளார்.