திருப்பூர், ஜன.23- கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு முழு வதும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகி றது. இந்த சூழ்நிலையில் முழு ஊர டங்கு தினமான ஜனவரி 23 ஞாயிறு அன்று திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் தற்காலிக சோத னைச் சாவடி அமைத்து, விசார ணைக்கு பின்னரே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல் லும் வாகன ஓட்டிகளை அனுமதித்த னர். அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு அப ராதமும் விதித்தனர். தாராபுரம் இதேபோல் ஊரடங்கு நாளான ஞாயிறன்று கூடு மிகவும் பரபரப்பாக காணப்படும் தாராபுரம் பூக்கடைகார் னர் பகுதி முழு ஊரடங்கை தொடர்ந்து வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், முழு முடக்கத்தை மீறி வெளியே வரும் பொதுமக்களை தாராபுரம் காவல்துறையினர் எச்சரிக்கை செய்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.