districts

பேருந்துக்குள் கசிந்த மழைநீர்: பயணிகள் அவதி

தருமபுரி, மே 31- தருமபுரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் அரசு பேருந்துக்குள் மழை நீர் கசிந்ததால், இருக்கையில் அமரா மல் நின்றுகொண்டே சென்றதால் பய ணிகள் அவதியடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் வளிமண்டல கீழ் அடுத்து சுழற்சி மற்றும் வெப்பச்சல னம் காரணமாக, கோடை மழை கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரு கிறது.  இந்நிலையில் தருமபுரி மாவட் டத்தில் தினந்தோறும் காலை நேரங்க ளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தாலும், மாலை நேரங்க ளில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று இரவு தருமபுரி மாவட்டத்தில் அரூர், மொரப் பூர், ஒடசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அப்பொழுது அரூர் போக்குவரத்து பணிமனைக்கு உட்பட்ட அரசு புறநகர் பேருந்து ஆவலூரிலி ருந்து தருமபுரி வரை செல்கிறது. இப் பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணி கள் அரூரிலிருந்து தருமபுரிக்கு சென் றுள்ளனர். அப்பொழுது மொரப்பூர், ஒட சல்பட்டி கூட்ரோடு இடைப்பட்ட தூரத் தில் கனமழை பெய்துள்ளது. இந்த  மழையினால் பேருந்தில் மேற்கூரைகள் ஆங்காங்கே உடைந்து இருப்பதால், மழை நீர் பேருந்தில் கசிந்துள்ளது. இதனால் பேருந்தில் உள்ள இருக்கை யில் முழுவதும் மழை நீர் இருந்த தால் இருக்கையில் அமர முடியாத பய ணிகள் பேருந்தில் நின்று கொண்டே பய ணம் செய்தனர். பேருந்து முழுவதும் மழைநீர் கசிந்து வந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். சிலர் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது மழையில் நனைந்து வந்தனர். பெரும்பாலான அரசு பேருந்துகளில் மழை வந்தால் இதே நிலைமைதான் நீடித்து வருகிறது. எனவே அரசு பேருந் துகளை முறையாக பராமரித்து மழைக் காலங்களில் மழை நீர் கசிவதை தடுப் பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரு கின்றனர்.

;