districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மிரட்டலுக்கு உள்ளாகும் செவிலியர்கள்

மிரட்டலுக்கு உள்ளாகும் செவிலியர்கள் சேலம், ஜூன் 21- கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள பணிகளுக்கு முரணாக, கணினிப்பணிக்கு உட் படுத்துவதையும், மிரட்டுவதையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செலிவி யர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் பெருந்திரள் முறை யீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சந்திரா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மாநில இணைச்செயலாளர் வனஜா, மாநில துணைத் தலைவர் கோகிலா, மாவட்டப் பொருளாளர் உமா மகேஸ்வரி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதன்பின் செய்தியாளர் களிடம் போராட்டக்காரர்கள் பேசுகையில், முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை மற்றும்  வருவாய் துறையில் ஒப்படைத்து, கிராம சுகாதார செவி லியர்கள் மேற்கொள்ளும் தாய் -  சேய் நலப்பணி தடுப்பூசி மற்றும் குடும்ப நலப்பணிகளை செவ்வனே நடைபெற உரிய உத்தரவு வழங்க வேண்டும். ஆண் சுகாதார ஆய்வாளர்க ளுக்கு பதவி உயர்வு வழங்குவது போல, பெண்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். செவிலியர்களுக்கு ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு முரணாக, கணினிப்  பணிக்கு உட்படுத்துவதையும், அதிகாரிகள் மிரட்டுவதையும் கைவிட வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும், என்றனர்.

சேலம் வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து

சேலம் வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து சேலம், ஜூன் 21- ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, சேலம் வழியாக செல்லும் 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார் பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், செகந்திராபாத் கோட்டம், ஆசியாபாத் சாலை - ரெச்னி சாலை ரயில் நிலை யங்களுக்கு இடையே 3 ஆவது ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, சேலம் வழியாக இயக்கப்படும் 10 ரயில்கள் குறிப்பிட்ட தினங்க ளுக்கு ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி, கொச்சுவேலி -  ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜூன் 21, 28 மற்றும் ஜூலை 5 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. இதே போல, ஹஸ்ரத் நிஜாமுதீன் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் வரும் ஜூன் 24 மற்றும் ஜூலை 1, 8 ஆகிய தேதி களில் ரத்து செய்யப்படுகிறது. கொச்சுவேலி - இந்தூர் வாராந்திர விரைவு ரயில் வரும் ஜூன் 22, 29 ஆகிய தேதி களிலும், இந்தூர் - கொச்சுவேலி வாராந்திர விரைவு ரயில்  வரும் ஜூன் 24 மற்றும் ஜூலை 1 ஆம் தேதிகளிலும், திரு நெல்வேலி - பிலாஸ்பூர் வாராந்திர விரைவு ரயில் வரும் ஜூன் 23, 30 ஆம் தேதிகளிலும், பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர விரைவு ரயில் வரும் ஜூன் 25 மற்றும் ஜூலை 2  ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், பிலாஸ் பூர் - எர்ணாகுளம் வாராந்திர விரைவு ரயில் வரும் ஜூன் 24 மற்றும் ஜூலை 1 ஆம் தேதிகளிலும், எர்ணாகுளம் – பிலாஸ் பூர் வாராந்திர விரைவு ரயில் வரும் ஜூன் 26 மற்றும் ஜூலை 3 ஆம் தேதிகளிலும், கொச்சுவேலி - கோர்பா விரைவு ரயில் வரும் ஜூன் 24, 27 மற்றும் ஜூலை 1, 4 ஆகிய தேதிகளி லும், கோர்பா - கொச்சுவேலி விரைவு ரயில் வரும் ஜூன் 26, 29 மற்றும் ஜூலை 3, 6 ஆகிய தேதிகளிலும் ரத்து செய் யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரும்பு வெட்டுக்கூலியை அரசு ஏற்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 21- 50 சதவிகித கரும்பு வெட்டுக்கூலியை அரசே ஏற்க வேண்டும் என தருமபுரியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயி கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், ஆட்சியர் சாந்தி தலைமையில் விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. இதில், கலந்து கொண்ட விவசாயி கள் பேசுகையில், பாலக்கோடு சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடி யாக வழங்க வேண்டும். கரும்பு விவசாயிக ளுக்கு ஏற்படும் இழப்பு காரணமாக, பெரும் பாலான விவசாயிகள் தற்போது கரும்பு பயிரி டுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இந்நிலை யில், கரும்பு வெட்டுக்கூலி உயர்வால் விவ சாயிகள் கவலையடைந்து வருகின்றனர். அவற்றை ஈடுகட்ட அரசு, 50 சதவிகித வெட் டுக்கூலியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  மேலும், நல்லம்பள்ளி ஒன்றியம், பாகல ஹள்ளி பகுதியிலுள்ள விளை நிலங்களில் ஒன்றிய அரசின் கனிமவளத்துறை அதிகாரி கள், கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய் வதை நிறுத்த வேண்டும். மாவட்டம் முழுவ தும், ஏரிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு, 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களை பயன்படுத்த வேண் டும், என்றனர். அதனைத்தொடர்ந்து, பல்வேறு துறை  சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கைகள் அடங் கிய மனுக்களை விவசாயிகள் அளித்தனர். விவசாயிகளின் கேள்விகள் மற்றும் குறைக ளுக்கு ஆட்சியர் சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்லி ராஜ்குமார், சுப்பிர மணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை  மேலாண்மை இயக்குநர் பிரியா, வேளாண்மை  இணை இயக்குனர் (பொ) குணசேகரன் ஆகி யோர் விளக்கமளித்தனர்.

வரியில்லா ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 21- வரியில்லாத ஏற்றுமதியை ஒன்றிய அரசு ஊக்கப்படுத்த வேண்டுமென விசைத்தறி சங் கங்களின் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளது.  தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்ட மைப்பின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஈரோட் டில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இரா. வேலுச்சாமி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். மாநி லப் பொருளாளர் பாலசுப்பிரமணியம், ஒருங் கிணைப்பாளர்கள் டிஎஸ்ஏ.சுப்பிரமணியன் மற்றும் பா.கந்தவேல் ஆகியோர் உரையாற் றினர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, கடந்த பல ஆண்டுகளாக செயல் படாமல் உள்ள விசைத்தறி நலனுக்கான, பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தை செயல் படுத்தும் பொருட்டு, புதியதாக பதவி ஏற் றுள்ள ஒன்றிய அரசு முதல் 100 நாள், 100  செயல் திட்டத்தில் ஒன்றிய அரசு சேர்க்க வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு மறு சீராய்வு  மற்றும் விசைத்தறிக்கான தனி ரக ஒதுக்கீடு வழங்க வேண்டும். 13 மாத பழைய ஜிஎஸ்டி  ரீபண்ட், செலுத்திய அபராதத் தொகையை நெசவாளர்களுக்கு ஒன்றிய அரசு உடனடி யாக வழங்க வேண்டும். அரசு சார்ந்த அனைத் துத் துறையினர் சீருடைகள் மற்றும் மருத்து வத் துணி உபகரணங்களை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்து வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும்.  விசைத்தறிகளை மேம்படுத்த எம்எஸ்எம்இ மூலம் கொடுக்கப்பட்டு வந்த 25 விழுக்காடு மானியத்தை 50 விழுக்காடாக உயர்த்தி வழங்க வேண்டும். வங்கதேசம் வழியாக வரி இல்லாமல் இறக்குமதி ஆகும் வெளி நாட்டு துணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மத்திய அரசு வெளிநாடுகளுக்கு வரி யில்லா ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வேண் டும். தமிழக அரசால் 2006 ஆம் ஆண்டு கொண்டு  வரப்பட்ட சாயக் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகை யில் பைப்லைன் மூலம் கடலில் கலக்கும் திட்டத்தை மீண்டும் புத்துயிர் கொடுத்து செயல்படுத்த வேண்டும். காட்டன் கார்ப்ப ரேசன் தமிழ்நாடு என்ற அமைப்பை தமிழக  அரசு முறைப்படுத்தி பஞ்சு கொள்முதல் செய்ய வேண்டும். டெக்னிக்கல் டெக்ஸ் டைல் மற்றும் மெடிக்கல் டெக்ஸ்டைல் துறையை மேம்படுத்தும் முயற்சியில் முதற் கட்டமாக விசைத்தறி நெசவாளர்கள் எளி தில் பயன் பெறும் வகையில் உற்பத்திக் கான மூலப்பொருள் கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

சுகாதார நிலையத்தை செயல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 21- திருப்பூர் முருங்கப்பாளையம் பகு தியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  மருத்துவர்கள் மற்றும் பணியாளர் களை நியமித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. முருங்கப்பாளையம் பகுதியில் நியாய விலைக் கடையில் நிரந்தரப் பணி யாளரை நியமிக்கவும், பொருள் விநி யோகத்தை முறைப்படுத்த வலியுறுத் தியும், ஆரம்ப சுகாதார நிலையம் திறக் கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் செயல் பாட்டிற்கு கொண்டு வராததைக் கண் டித்தும், உடனடியாக மருத்துவர் மற் றும் ஊழியர்களை பணியமர்த்தி பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என  வலியிறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் நியாய விலை கடை முன்பாக இந்த  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஏ கிளைச்  செயலாளர் டி.சம்பத் தலைமை ஏற்றார்.  வடக்கு மாநகரச் செயலாளர் பி ஆர். கணேசன் மற்றும் பி கிளைச் செயலாளர்  குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிகழ்வில் 30க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.பிரச்சனைகளை தீர்க்கக்கோரி கூட்டு றவு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தி டமும் மனு கொடுக்க முடிவு செய்யப் பட்டது.

மண் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

மண் திருட்டை தடுக்க வலியுறுத்தல் தருமபுரி, ஜூன் 21- காரிமங்கலம் பகுதியில் ஏரிகளில் அதிகரித்து வரும் மண் திருட்டை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதி களில், 35க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சித்துறை வசமுள்ள இந்த ஏரிகளில் மண் எடுக்க, மாவட்ட நிர்வாகம் யாருக்கும் அனுமதி அளிக்க வில்லை. ஆனால், பல்வேறு ஏரிகளில் மண் திருட்டு, அதி களவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பந்தாரஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கரகப்பட்டி ஏரி, வெள்ளாளன் குட்டை ஏரி ஆகியவற்றில் மண் அதிகளவில் திருடப்பட்டதால், இந்த ஏரிகள் பள்ளத்தாக்குகளாக மாறிவிட்டது. இதேபோல் மொட்டலூர் ஏரி, நரியனஅள்ளி ஏரி, செல்லமாரம்பட்டி ஏரி,  பூனாத்தனஅள்ளிபுதூர் ஏரி என பல்வேறு ஏரிகளில் மண் திருட்டு நடைபெற்று வருகிறது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் ஏரியில் நிரம்பினால், ஏரிக்கு செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் என பலரும் ஏரிகளில் மூழ்கி பலியாகும் அபாயம் உள்ளது. எனவே, ஏரி களில் நடந்து வரும் மண் திருட்டை தடுத்து நிறுத்துவது டன், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

துண்டான கையினை இணைத்து ஈரோடு அரசு மருத்துவமனை சாதனை

துண்டான கையினை இணைத்து ஈரோடு அரசு மருத்துவமனை சாதனை ஈரோடு, ஜூன் 21- எதிர்பாராத விபத்தினால் துண்டிக்கப்பட்ட கையினை அறுவை சிகிச்சை மூலம் இணைத்து ஈரோடு தலைமை அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், பி.பெ.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த வர் மகாலிங்கம் (52). இவர் கடந்த மே 30 ஆம் தேதி இரவு  எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானார். விபத்தில் அவ ரது வலது கை துண்டிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் அன்றைய தினமே இரவு 9.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரங்கிற்கு நள்ளிரவு 12.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டார். 9 மணி  நேரம் தொடர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த  அறுவை சிகிச்சையினை மருத்துவர் கௌதம் தலைமை யில் மயக்கவியல் மருத்துவர், 3 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் மேற்கொண்டனர். அதன்பிறகு மருத்துவம னையில் மகாலிங்கம் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை கள் அளிக்கப்பட்டது. தற்போது அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு மகாலிங்கம் வீட்டில் நலமாக உள்ளார். இந்த  அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ரூ.5லட்சம் தோராயமாக செல வாகும். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் முதல மைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.59 ஆயிரத்து 300 ஒதுக்கீடு செய்யப்பட்டு முழுமையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

 

;