districts

img

வாக்காளர் பட்டியல் வெளியீடு: திருத்தம் மேற்கொள்ள தேதி அறிவிப்பு!

கோவை, அக்.29- வரைவு வாக்காளர் பட்டியலை  மாவட்ட தேர்தல் அலுவலர்கள் செவ்வாயன்று வெளியிட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வா யன்று வரைவு வாக்காளர் பட்டி யலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி வெளியிட்டார். பின்னர்  கிராந்திகுமார் பாடி கூறுகையில், தற்போது வெளியிடப்பட்ட வரைவு  வாக்காளர் ‌பட்டியலின்படி, கோவை மாவட்டத்தில் ‌15,43,073 ஆண்கள்‌, 16,05,516 பெண்கள்‌ மற்றும் மாற் றுப் ‌பாலினத்தவர்கள் ‌650 பேர்‌ என மொத்தம்‌ 31,49,239 வாக்காளர்கள் ‌உள்ளனர்‌. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிகபட்ச மாக 4,78,604 வாக்காளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது.  வால்பாறை (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,99,173 வாக்காளர் களை கொண்டு கடைசி இடத்தில் உள்ளது. இந்திய தேர்தல்‌ ஆணை யத்தின்‌ அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல்‌ சிறப்பு சுருக்கமுறை திருத் தம்‌ - 2025யினை முன்னிட்டு எதிர் வரும்‌ நவ.16, 17, 23, 24 ஆகிய நாட்களில்‌ கோவை ‌மாவட்டத்தி லுள்ள அனைத்து சட்டமன்றத் ‌தொகுதிகளிலுள்ள அனைத்து நிர் ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் ‌காலை 10 மணி முதல்‌ மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் ‌நடைபெற உள்ளது. எனவே, 01.01.2025 ஆம் ‌தேதியில்‌ 18 வயதினைப்‌பூர்த்தி செய்பவர் கள்‌ வாக்காளர் ‌பட்டியலில்‌ தங்க ளது பெயரினை புதியதாக சேர்க்க வும்‌, வாக்காளர்‌ பட்டியலிலுள்ள பதிவுகளில்‌ திருத்தம்‌ செய்யவும்‌, மற்றும் ‌பெயர்கள்‌ நீக்கம்‌ செய்ய வும்‌ வேண்டுபவர்கள்‌ படிவங்கள் ‌மூலமாகவும்‌, voters.eci.gov.in என்ற இணையதளம்‌ மூலமாகவும்‌, Voter Helpline என்ற மொபைல் ‌செயலி மூலமாகவும்‌ விண்ணப்பிக் கலாம்‌. நவ.28 ஆம் தேதி வரை மனுக்கள் ‌பெறப்படும், என்றார். ஈரோடு இதேபோன்று ஈரோடு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட் சியருமான ராஜகோபால் சுன்கரா  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி  பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட் டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8  சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம்  950706 ஆண்கள், 1013789 பெண் கள், 181 மற்றவர் என மொத்தம் 1964676 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் ஈரோடு  மேற்கு 2,98,484  வாக்காளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது.  அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் 2,18,725 வாக்காளர்களை கொண்டு கடைசி இடத்தில் உள்ளது. ஆண் வாக்காளர்களை விட பெண் வாக் காளர்கள் 3.22 சதவீதம் அதிகமாக உள்ளனர். உதகை நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,78,961  வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் வாக்காளர் பட்டிய லில் உதகை சட்டமன்ற தொகுதி யில் 1,96,758 கொண்டு முதலிடத் தில் உள்ளது. குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 1,88,931 வாக்காளர் களை கொண்டு கடைசி இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் வெளி யிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டி யலை விட தற்போது 2,119 பேர் கூடு தலாக உள்ளனர். இதேபோல் நீல கிரி தொகுதியை பொறுத்தவரை ஆண்களை விட பெண் வாக்காளர் கள் அதிக அளவில் உள்ளனர். அதா வது நீலகிரி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 2,77,002 பேரும், 3,01,940 பெண் வாக்காளர்களும் உள்ளனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 7,01,538, பெண் வாக் காளர்கள் 7,47,234, மாற்றுப் பாலினத் தவர்கள் 246 என நிகர வாக்காளர் கள் 14,49,018 பேர் உள்ளனர். சேலம் சேலம் மாவட்டத்திலுள்ள 11  சட்டமன்ற தொகுதிகளில், மொத் தம் 29,61,513 வாக்காளர்கள், வாக் காளர் பட்டியலில் இடம் பெற்றுள் ளனர். அதன்படி, ஆண்கள்  14,71,774 எண்ணிக்கையிலும், பெண் கள் 14,89,420 எண்ணிக்கையிலும், மாற்றுப் பாலினத்தவர்கள் 319 எண் ணிக்கையிலும் வாக்காளர் பட்டி யலில் இடம்பெற்றுள்ளனர்.