districts

img

கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை, ஜூன் 26- கனமழையால், உதகையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், பல குடியிருப்பு  பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால்  பொதுமக்கள் அவதி அடைந்த னர்.  தமிழகத்தில் ஏப்ரல் மே மாதங்க ளில் நிலவிய வெயில் குறைந்து தற் போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதற்கு இடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி,  கோவை உள்ளிட்ட மாவட்டங்க ளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.  சென்னை வானிலை மையம் அறிவித்தபடி செவ்வாயன்று இரவு  முதல் நீலகிரியில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நின்றது. மேலும், கடும் குளிர் நிலவிய தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இத னைதொடர்ந்து, கனமழையால் உதகை மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளான அத்திக்கல், புது தோட்டம், மஞ்சனக்கொரை, எம்‌. பாலாடா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதையடுத்து, நீலகிரி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் அரி ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடங்களுக்கு சென்று மரங்களை வெட்டி அகற் றினர். இதன் பின்னர் வழக்கம் போல் போக்குவரத்து சீரானது. மேலும், தாவரவியல் பூங்கா அரு கில் உள்ள ராஜ்பவன் மாளிகை சாலையில் விழுந்த மரம் அகற்றப் பட்டது. இதேபோல் உதகை அடுத்த  எமரால்டு பகுதியில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. முன்னதாக, மழை  பாதிப்புகளை கவனத்தில் கொண்டு கூடலூர் மற்றும் பந்தலூர்  பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிக ளுக்கு மாவட்ட மாவட்ட ஆட்சியர்  மு.அருணா புதனன்று விடுமுறை  அறிவித்தார்.  உதகை மற்றும் குந்தா தாலு காக்களில் மழையின் தாக்கம் அதி கமாக இருந்த நிலையிலும், பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப் படாததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்கு சென் றனர். உதகையில் புதனன்று நிலவ ரப்படி 18 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. காற்றின் வேகம்  மணிக்கு 11 கிலோமீட்டர் என்ற அள விலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு 80 சதவீதமாகவும் இருந் தது.  சிபிஎம் ஆறுதல் இதனிடையே நீலகிரி மாவட்டம்  பந்தலூரையடுத்த சேரம்பாடி பகுதி யில் கனமழையின் காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டு ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் பெரும் சேதம டைந்தது. இதனையறிந்து மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட ஊராட்சி  உறுப்பினர் ஹனிபா மாஸ்டர், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கள் எம்.கே.பாபு, மணிகண்டன், விதொச செயலாளர் பன்னீர் செல் வம் உள்ளிட்டோர் நேரில் சென்று பாதிப்புக்குள்ளான பகுதிகளை ஆய்வு செய்தனர். மேலும், அப்ப குதி மக்களை சந்தித்து ஆறுதல்  கூறியதோடு, மாவட்ட நிர்வாகத் தின் கவனத்திற்கு உரிய முறையில்  கொண்டு செல்வதாக உறுதி அளித் தனர். நீலகிரி மாவட்டத்தில் புதனன்று  8 மணி நிலவரப்படி வரை பதிவான  மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு, கூடலூர் 148, பந்தலூர் 135, சேரங்கோடு 124, அவிலாஞ்சி 110, பாடந்துறை 90,  ஓவேலி 88, அப்பர் பவானி 69, செரு முள்ளி 69, நடுவட்டம் 52, கிளன்மார் கன் 40, குந்தா 22, எமரால்டு 21,  உதகை 18, கோத்தகிரி 14, கோட நாடு 13, கீழ் கோத்தகிரி 10, கெத்தை  மற்றும் குன்னூர் 8, கேத்தி 7, பர்லி யார் 3 மி.மீ., மழை பதிவாகியுள் ளது.