districts

வால்பாறை செல்ல இனி இ- பாஸ் தேவை இல்லை

பொள்ளாச்சி, டிச. 4-  வால்பாறை செல்ல இனி இ - பாஸ் அனுமதி தேவையில்லை என வால்பாறை நகராட்சி மற்றும் வருவாய்த்துறை தெரிவித் துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தளமான வால்பாறைக்கு இ - பாஸ்  முறை கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி, வால்பாறை செல்ல அட்டகட்டி  பகுதியில்  வருவாய்த் துறையினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கடந்த 8 மாதங்க ளாக இ- பாஸ் முறை பயன்பாட்டில் இருந் தது. இந்நிலையில், இந்த இ - பாஸ் நடை முறையினால் பெருமளவு பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரி வித்து வந்தனர். மேலும், சிறு வியாபாரி கள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் வால்பாறை செல்ல இ- பாஸ் நடைமு றையில் இருந்து தளர்வுகள் அளிக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.  இந்நிலையில், வெள்ளிக்கிழமை முதல்  வால்பாறை செல்ல இ - பாஸ் தேவை இல்லை என வருவாய்த் துறை அறிவித் துள்ளது. மேலும், வால்பாறை பகுதிக ளிலுள்ள வனத்துறை கட்டுப்பாட்டு இடங்க ளான சின்னகல்லார், நல்லமுடி, பூஞ் சோலை உள்ளிட்ட இடங்கள் செல்லவும் விரைவில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி  வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;