districts

img

ஓசூர் நாளந்தா பள்ளியில் நவரத்தினா 20 ஆம் ஆண்டு விழா

ஓசூர், ஜன. 13- கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் வட்டம் கெலமங்கலம் சாலையில் உள்ள நாளந்தா சர்வதேச பொதுப் பள்ளி யில் 9 ஆம் ஆண்டை முன்  னிட்டு ‘நவரத்னா 20 ’ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.             முதல்வர் வெங்கடாச்சலம் வரவேற்றார்.  நிர்வாக இயக்குநர் மருத்துவர் புவியரசன் இதுவரை பள்ளி மாண வர்கள் மாவட்டத்திலும், மாநில, தேசிய அளவிலும் கல்வி, விளையாட்டு மற்றும்  தனித்திறன் போட்டிக ளில் நிகழ்த்திய சாதனை களையும், அதற்கான பள்ளி நிர்வாகத்தின், ஆசிரி யர்களின் தொடர் ஊக்கு விப்புகள், செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். பல குரல் கலைஞர் ஹானஸ்ட்ராஜ் தன் திற மைகளால் பெற்றோர் மாண வர்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தார். திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் கீர்த்தன்யா பெற்றோர் மாணவர் களுக்கு திறனூக்க  உரையாற்றினார். பள்ளி ஸ்தாபகத் தலைவர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி, ஆகியோர் பள்ளிக் குழந்தைகளை பாராட்டி கேடயங்கள், பதக்கங்கள் வழங்கினர். நிர்வாக இயக்குனர் கௌதமன் முன்னிலை வகித்தார். எல்கேஜி முதல் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளும் புதுமையான நடன நிகழ்ச்சிகள் செய்து காட்டினார்கள். அதில் எல்லா சாதி,மத,இன வேறு பாடுகளை கலைந்து வேற்று மையில் ஒற்றுமையே இந்திய தேசத்தின் உயிர் நாடி என்பதே அடிநாதமாய் இருந்தது.  நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கி ணைத்தனர். துணை முதல்வர் கீதா நன்றி கூறி னார். ஆண்டு விழா சிறக்க உழைத்து ஆசிரியர்களை ஸ்தாபக தலைவர் கொங்க ரசன் பாராட்டினார்.

;