districts

img

ரயில் பயணிகளை அச்சுறுத்தும் குரங்குகள்!

சேலம், ஜூன் 29- சேலம் ரயில் நிலையத்தில் பயணிகளை  அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடிக்க வேண் டும் என வனத்துறைக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் ரயில் நிலையத்திற்கு நாள்தோ றும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் பல்வேறு பகுதியிலிருந்து வந்து செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள், ரயிலில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக் கும் மேலாக சேலம் ரயில் நிலையத்தில் குரங்கு ஒன்று ரயில் பயணிகளை அச்சுறுத் தும் வகையில் கடிக்கப் பாய்வது, கையில் வைத்திருக்கும் பைகளை பிடுங்குவது, ஆடைகளை பிடித்து இழுப்பது மேலும் ரயில்  நிலையத்தில் உள்ள கடைகளுக்குள் புகுந்து,  அங்கு இருக்கக்கூடிய உணவுப் பொருட் களை சூறையாடுவது என்ற பல்வேறு செயல் களில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து ரயில் பயணிகள், ரயில்வேத்துறை அதிகாரிகளி டம் புகாரளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்ப தாக அதிகாரிகள் கூறிய நிலையில், தற்போது வழக்கத்திற்கு மாறாக ரயில் நிலையத்துக் குள் திடீரென புகுந்த குரங்கு, ரயில் பய ணிகள் மற்றும் பிளாட்பாரத்தில் அமர்ந்திருக் கும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த ரயில்வே போலீசார் குரங்கை விரட்டி னர், ஆனால், குரங்கு அங்கிருந்து செல்லா மல் ரயில்வே போலீசாருக்கு ஆட்டம் காட்டி யது. இதுகுறித்து ரயில்வே துறையினர் வனத் துறையினருக்கு புகாரளித்தனர். அதனடிப்ப டையில் வனத்துறையினர் ரயில் நிலையத் திற்குள் உலாவும் குரங்கை பிடிக்கும் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

;