சேலம், பிப்.7- சேலம் மாவட்டம், ஏற்காடு மேல் அழகாபுரம் பகு தியைச் சேர்ந்தவர்கள் சுந்தரராஜன் - ஆயா பொண்ணு தம்பதியினர். இவர்கள் தனது உறவினர் வீட்டு திரு மணத்திற்காக மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டா புரம் சென்றிருந்தனர். இந்நிலையில், திங்களன்று காலை 3 மணியளவில் சுந்தரராஜனின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஏற்காடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இதற்கிடையே, தீ முழுவதும் எரிந்து வீட்டில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்த தில், வீட்டின் மேற்கூரை இடிந்து சேதமானது. மேலும், வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்கள் தீக்கிரை யாகின. அதேநேரம், வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து ஏற்காடு காவல் துறையினர் மேற் கொண்ட முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.