districts

img

தனியார் மன நல காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை

கோவை, ஏப்.13– மேட்டுபாளையத்தில் உள்ள தனியார் மன நல காப்பகத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பமாகியுள்ள சம்பவம் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தனி யார் மன நல காப்பகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வருகிறது.  ஆகவே, மாவட்ட காவல்துறை மற் றும் மாவட்ட நிர்வாகம்  தலையீடு செய்ய வேண்டும் என மாதர் சங்கத் தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோ ரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்துள்ள  புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டம், மேட்டுபாளை யத்தில் பழைய நகராட்சி கட்டி டத்தில் ஹெல்பிங் ஹார்ட்டி என்னும் தனியார் மனநல காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு 25க்கும் மேற்பட்ட பெண்களும், 25க்கும் மேற்பட்ட  ஆண்களும் ஒன்றாக தங்க வைக்கப் பட்டுள்ளனர். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு காப்பகத்தில் தங்கி யிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்பமுற்ற நிலையில் கோவை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாதர் சங்கத்தின் சார்பில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தோம். மேலும், அமைப் பின் சார்பிலும் காப்பகம் சென்று  விசாரித்தோம். அங்கு காப்பகதில் பெண்களுக்கென்று தனி கழிவறை கள் இல்லை. பாதுகாப்பான சூழ லும் இல்லாதது தெரியவந்தது. இந்நிலையில், அங்கு பணியில்  இருந்த காவலாளியை அடித்து மிரட்டி நான் தான் தவறு செய்தேன் என்று எழுத்து மூலமாக பதிவு  செய்திருப்பதாக கேள்விப்பட் டோம். அதேநேரம், இச்சம்பவத் தில் தற்போது வேறு ஒரு நபர் கைது செய்திருப்பதாகவும் கூறப்படுகி றது. மேலும், இச்சம்பவம் நடை பெற்ற பிறகு அங்கிருந்த ஆண் களை இடமாற்றம் செய்துள்ளனர். ஆகவே, இச்சம்பவத்தில் தொடர்பு டைய நபர்கள் யாராக இருந்தாலும் நியாயமான முறையில் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனி யார் நடத்தும் இந்த மனநல காப்ப கத்தை அரசே ஏற்று நடத்த வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர். முன்னதாக, இந்த மனுவினை மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. ராதிகா, பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜ லட்சுமி, சுதா, மேட்டுப்பாளையம் மாதர் சங்க நிர்வாகிகள் மெகபூ னிசா, ரிபாயா, ஜீவாமணி மற்றும் வனஜா ஆகியோர் தலைமையில் மாதர் சங்கத்தினர் திரண்டு வந்து அளித்தனர்.