கரூர், மே 25-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றியச் செயலாளர் கே.சக்திவேல் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியக் குழுவிற்கு உட்பட்ட தெலுங்கப்பட்டி கிளை உறுப்பினர் டி.தங்கவேல் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.