districts

img

தியாகி லட்சுமண ஐயருக்கு மணிமண்டபம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

கோபி, பிப். 22- ஈரோடு மாவட்டம் கோபி யில், சுதந்திர போராட்ட தியா கியும் கல்வி தந்த வள்ளலு மான ஜி.எஸ்.லட்சுமணஐய ரின் 109ஆவது பிறந்த நாளை  முன்னிட்டு சனியன்று தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னனி சார்பில், லட்சுமண ஐய ரின் உருவப்படத்திற்கு மரி யாதை செலுத்தப்பட்டது.  தீஒமு கோபி தாலுகா சார்பில் தாலுகா செயலாளர் கே.சி.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிபிஎம் கோபி தாலுகா செயலாளர் க.பெருமாள், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்வி.மாரிமுத்து,  தவிச மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி, மாதர் சங்க தாலுக்கா செயலாளர் எஸ். மல்லிகா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். மணிமண்டபம்  சுதந்திர போராட்ட தியாகி ஜி.எஸ்.இலட் சுமணஐயரின் 109 ஆவது பிறந்த நாளை முன் னிட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டக்குழுவின் சார்பில் தியாகி  அவர்களுக்கு புகழஞ்சலியைத் தெரிவித்து  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தியாகி  லட்சுமண அய்யர் தனது இளமைக்காலத் திலேயே சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற வர். சாதி ஒழிப்பு போராட்டத்தைத் துவக்கி, தனது கிணற்றில் பட்டியலினத்தவர்கள் தண்ணீர் எடுக்கலாம் என்று அறிவித்து அதனை நடைமுறை படுத்தினார். அண்ணல்  காந்தியின் அறிவுரையை ஏற்று பட்டியலின  மாணவர்கள் கல்வி பயில விடுதி ஆரம் பித்தார். அதில் பட்டியலின மாணவர்கள் மற்றும் இதர பிற்பட்ட மாணவர்களும் தங்கிப் பயின்று நூற்றுக் கணக்கானவர்கள் அரசு வேலைக்கு சென்றுள்ளனர். அவர்களின் வாரிசுகளும் தொடர்ந்து படித்து வாழ்க்கை யில் முன்னேறியுள்ளனர். கோபிசெட்டி பாளையம் நகராட்சித் தலைவராக இருமுறை  பதவி வகித்து, கையால் மலம் அள்ளும் முறையை ஒழித்தவர். தனது சொந்த நிலத்தை அரசு அலுவலகங்கள், பள்ளிகள்  வீடில்லாத பட்டியலின மக்கள் வீடுகள்  கட்டவும், என பல்வேறு பொது காரியங் களுக்கு தனது சொந்த நிலத்தை இலவச மாக வழங்கியுள்ளார்.  அப்படிப்பட்ட தியாகிக்கு மணிமண்ட பம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என்று  தமிழக அரசிடம் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுத்து முறையிட்டுள்ளோம். இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆகவே தமிழ் நாடு அரசு தியாகி லட்டுமண அய்யருக்கு கோபிசெட்டிபாளையத்தில் மணிமண்டபம் மற்றும் சிலை அமைத்திட ஆணையிடுமாறு மாவட்டக் குழுவின் சார்பில் தலைவர் பி.பி.பழனிசாமி, செயலாளர் மா.அண்ணாதுரை ஆகியோர் விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளனர்.