districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஆடு திருடியதாக தாக்கப்பட்டவர் பலியான வழக்கு: மேலும் 3 பேர் கைது

நாமக்கல், ஜூன் 29- பள்ளிபாளையம் அருகே ஆடு திருடியதாக இளை ஞர்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த வழக்கில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையத்தில், அண்மையில் ஆடு திருட வந்த வர்கள் என நினைத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில்,  படுகாயமடைந்த இருவரும் ஈரோடு அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆவத்தி பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் உயிரி ழந்தார். இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, மோளகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த 5 பேரை சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். மேலும், தலைமறை வாக இருந்தவர்களைத் தீவிரமாகத் தேடி வந்த நிலை யில், அப்பகுதியைச் சேர்ந்த சேகர் (39), முத்துசாமி  (40), விஜயகுமார் (38) ஆகிய 3 பேரை பள்ளிபாளை யம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக் கில் இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

சிப்காட் தொழிற்பேட்டை வேண்டாம்! 
மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் மனு

நாமக்கல், ஜூன் 29– விவசாய நிலங்களை, தரிசு நிலங்களாக காண்பித்து மாவட்ட வருவாய்த் துறையினர் சிப்காட் நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பி யுள்ளதை திரும்பப் பெற்று உண்மையான அறிக்கையை வழங்க வேண்டும் என விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரெ. சுமன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க் கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மோக னூர், புதுப்பட்டி வட்டத்தைச் சேர்ந்த  விவசாயிகள் மற்றும் தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகத்தினர் தங்கள் கோரிக் கையை மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுவாக அளித்தனர்.  அதில்,விவசாயிகளின் நிலங்களில் சிப் காட் அமைக்கக்கூடாது என்றனர். இதுகு றித்து, தமிழக விவசாயிகள் முன்னேற்ற கழ கத்தின் நிர்வாகிகள் பேசுகையில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் பகுதிகளில், சிப்காட் நிறுவனம், தொழில்மையம் அமைப்பதற்கு நிலம் எடுக்க வருவாய்த்துறையினர் ஆய்வுப்பணியினை மேற்கொண்டுள்ளனர். இதுசம்பந்தமாக கடந்த 2023 ஆம் ஆண்டு மே 29 அன்று நாமக்கல் வருவாய்க் கோட் டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் விவ சாயிகளை அழைத்து, வருவாய்த்துறையி னர் சார்பில் தயார் செய்யப்பட்ட வரைபடங் களையும், அறிக்கைகளையும் விவசாயிகளி டம் காண்பித்தனர். அப்போது, வருவாய்த் துறையினர், நீர்நிலைகளை மறைத்து விவ சாய நிலங்களை தரிசு நிலங்கள் என குறிப் பிட்டு இருந்தார்கள். இதுசம்பந்தமாக விவசா யிகள், கடுமையான ஆட்சேபனை தெரிவித் ததை அடுத்து, அதன்பேரில் ஆட்சியர் சம்பந் தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் அனுப்பி புதிதாக வரைபடம் தயாரிக்கப்படும் என்றும் விவசாய நிலங்களின் உண்மைத் தன்மை குறித்தும் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார். ஆனால் ஒரு வருடம், ஒரு மாதம் ஆகியும் இதுவரை அந்த இடத்தை எந்த அதிகாரிக ளும் பார்வையிடாமல் தன்னிச்சையாக சில ரின் தூண்டுதலின் பேரில் தவறான அறிக் கையை அரசுக்கு அனுப்பியுள்ளார்கள். இத னால் தொழில் துறை செயலாளர் இப்பகுதி யில் சிப்காட் நிலம் எடுக்க நிர்வாக அனு மதி வழங்கப்படும் என கூறியுள்ளார். முழுக்க  முழுக்க தவறான தகவலை மாவட்ட நிர்வா கம் அளித்ததின் பேரில்தான் சிப்காட் நிறு வனம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. 50 நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகி றோம். மாவட்ட நிர்வாகம் அழைத்துப் பேச வில்லை. எனவே திருச்சி மாவட்ட எல்லைக்கு குடிநகர்வு ஒத்திகை நடத்த உள்ளோம், என்ற னர்.

புதிய பேருந்து இயக்கம்; மக்கள் மகிழ்ச்சி

நாமக்கல், ஜூன் 28- குமாரபாளையத்திலிருந்து திருச்செங் கோட்டிற்கு புதிய பேருந்து இயக்கப்பட்டுள் ளதால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தி லிருந்து திருச்செங்கோட்டிற்கு செல்லும்  வகையில், 4 அரசு நகரப் பேருந்துகள் இயக் கப்பட்டு வருகின்றன. குமாரபாளையம் பகு தியில் ஏராளமான விசைத்தறி, சாயப்பட் டறை, நூற்ப்பாலை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும், அரசு மற்றும் தனி யார் பள்ளிகள் கல்லூரிகளில் கல்வி பயி லும் மாணவ மாணவியர் என பல்வேறு தரப்பி னர் அதிகளவு பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கூடுதலான பேருந்து களை இயக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, 4 பேருந்துகளில் ஒரு பேருந்து சில நாட்களுக்குப் பிறகு பழுதான நிலையில், அதற்கு பதிலாக மாற்றுப்பேருந்து புதிதாக விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய பேருந்து நிலையம் அமைக்க ஒப்புதல்

தருமபுரி, ஜூன் 29- தருமபுரி நகரில் ரூ.40 கோடி மதிப் பில் புதிய பேருந்து நிலையம் அமைப் பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்பு தல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலகத்திலுள்ள அறிஞர் அண்ணா கூட்டரங்கில் வெள் ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத் துக்கு நகர்மன்றத் தலைவர் லட்சுமி மாது தலைமை வகித்தார். துணைத்தலைவர் நித்யா அன்பழகன், ஆணையர் புவ னேஸ்வரன் மற்றும் நகர்மன்ற உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில், நகராட்சி சார்பில் மேற்கொள் ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிக ளுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல், ஏற் கெனவே செய்து முடிக்கப்பட்ட பல் வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய் தல், புதிய திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக் கீடு செய்து அதற்கான பணி ஆணை  வழங்குதல், மக்களவை உறுப்பினர்  தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கு ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்ட 45  பொருள்கள் உறுப்பினர்களின் ஒப்புத லுக்காக கொண்டு வரப்பட்டு, நிறை வேற்றப்பட்டன. தருமபுரி நகர்மன்ற சாதாரணக் கூட் டத்தை தொடர்ந்து, அவசரக் கூட்டம்  நடைபெற்றது. அப்போது, தருமபுரி நகரில் புதிய பேருந்து நிலையம் அமைப் பது தொடர்பாக நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து நகர்மன் றத் தலைவர் லட்சுமி மாது மற்றும் ஆணையர் புவனேஸ்வரன் விளக்கிக் கூறினர். அந்தத் தீர்மானத்துக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக ஒப்பு தல் வழங்கினர். இதில், தருமபுரி நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரி சலை தவிர்க்கவும், பொதுமக்களின் நலன் கருதியும், பென்னாகரம் சாலை யில் ரூ.40 கோடி மதிப்பில் புதிய  பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்பணிகளை மேற்கொள்வ தற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட் டது. புதிய பேருந்து நிலையத்தை கட்டி  அதனைப் பராமரித்து நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.55 லட்சத்து 40 ஆயி ரம் கட்டணமாக செலுத்த முன்வந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு புதிய  பேருந்து நிலையம் கட்டுமானப் பணி களை மேற்கொள்ள நகராட்சி கூட்டத் தில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தினமலர் வதந்திக்கு காவல்துறை மறுப்பு

திருப்பூர், ஜூன் 29 - திருப்பூர் மாவட்டம் உடு மலை வனப் பகுதியான மாவ டப்பு செட்டில் மெண்ட் பகுதி யில் கள்ளச்சாராயம் குடித்து  5 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தினமலர் முக நூல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது போல் சமூக வலைதளங்களி லும் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது  உண்மை அல்ல, பொய் யான செய்தி. அத்தகைய சம் பவம் எதுவும் நிகழவில்லை.  இந்த வதந்தியை பொது மக் கள் யாரும் நம்ப வேண்டாம்  என்று திருப்பூர் மாவட்ட காவல்துறை சனியன்று மறுப்பு அறிக்கை வெளியிட் டுள்ளது.

சாலையில் விப்படும் கழிவுநீர்: நோய்தொற்று ஏற்படும் அபாயம்

திருப்பூர், ஜூன் 29- ஆத்துப்பாளையம் அருகே தனி யார் நிறுவனம் சாலையில் கழிவு நீர் விடு வததால் நோய் தொற்று ஏற்பட வாய்ப் புள்ளது என் ஜெய் நகர் பகுதி மக்கள்  அச்சம் தெரிவிக்கின்றனர்.  திருப்பூர் வடக்கு சட்டமன்ற பகு திக்கு உட்பட்ட ஆத்துப்பாளையம் பாரதி நகர் நகரில் இருந்து ஜெய் ந கர் செல்லும் சாலையில் தனியார் நிறு வனத்தின் கழிவுநீர் விடப்படுகிறது. இத னால், ஜெய் நகர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும், அப்பகு தியில் உள்ள குடியிருப்புக்கும் செல் லும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும்  அபாயம் உள்ளது. இது குறித்து மாநக ராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  முறையாக கழிவுநீர் கால்வாய் அமைத்து விட வேண்டிய கழிவு நீரை  இப்படி பொறுப்பின்றி சாலையில் விடு கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக் காமல் உள்ளனர். எனவே பொதுமக் களின் நலன் கருதி உடனடியாக அரசு  இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரி வித்தனர்.

கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை  கண்டறிந்த பெண் உட்பட 4 பேர் கைது

கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை  கண்டறிந்த பெண் உட்பட 4 பேர் கைது தருமபுரி, ஜூன் 29- நல்லம்பள்ளி அருகே கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த பெண் உட்பட 4 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள நெக்குந்தி கிராமத்தில், சிலர் சட்டவிரோதமாக கர்ப்பிணிக ளின் கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறுவதாக வெள்ளியன்று சுகாதார இணை இயக்குநர் சாந் திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், நெக்குந்தி கிராமத்தில் தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது நெக்குந்தி கிராமத்தில் முத்தப்ப நகரில் உள்ளவீட்டில் சிலர், கர்ப்பிணிகளின் கருவிலுள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் உடனடி யாக அதியமான்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ரூ.13 ஆயிரம் பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக பாலினம் கண்ட றிந்து தெரிவித்தது தெரியவந்தது. இதையடுத்து இதில் தொடர்புடையே முருகேசன் (27), நடராஜ் (24), சின்னராஜ் (25) மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த லலிதா (36) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், ஸ்கேன் மெஷின் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு
சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு கோவை, ஜூன் 29- நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் சிறுவாணி அணை நீர்மட்டம் 20 அடியை தாண்டி உள்ளது. கேரள மாநிலம், மன்னார்காடு அருகே அடர்ந்த வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகரப் பகுதிக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். ஆனால், அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவுக்கு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு குறைக்கப்பட்டது. தினமும் நான்கு கோடி லிட்டர் தண்ணீர் தான் எடுக்கப்பட்டது. இதனால், அணையின் நீர்மட்டம் 9 அடிக்கு கீழ் சென்றது. எனவே தென்மேற்கு பருவ மழையை அனைவரும் எதிர்பார்த்த நிலையில், வழக்கத் திற்கு முன்பாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது அதிகபட்சமாக அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் 13 செ.மீ மழை பதிவானது. எனவே, அணையின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. இந்நிலையில், வெள்ளியன்று காலை நிலவரப்படி அணைப் பகுதிகளில் 5 செ.மீ மழையும், அடிவா ரத்தில் 2 செ.மீ மழையும், பதிவாகி இருந்தது. அணையின் நீர்மட்டம் 20.24 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர அளவு அதிகரித்து வருகிறது. எனவே, அணை யில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேலும், வெள்ளியன்று 6 கோடியே 60 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது. இதில், 6 கோடி லிட்டர் கோவை மாநகரப் பகுதிக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது.

பால் கொள்முதல் விலையை உயர்த்த  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயர்த்த  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் ஈரோடு, ஜூன் 29- பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசுக்கு பரிந் துரை செய்யக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளரும், பால் உற்பத்தியாளர் சங்கத் தின் மாநிலப் பொருளாளருமான ஏ.எம்.முனுசாமி கொடுத்த மனுவில், கால்நடைகளுக்கு தேவையான தவுடு, பருத்திக்  கொட்டை, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை உயர்ந்துள் ளது. கலப்புத்தீவனத்தின் விலையும் உயர்த்தப்பட்டுள்ள  நிலையில் தற்போது வழங்கப்படும் கொள்முதல் விலை கட் டுப்படியாகாது. எனவே, கொள்முதல் விலையை உயர்த்த  அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். சத்தியமங்கலம் பகுதியில் கால்நடை மருத்துவர் இல்லா ததால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமலும், காப்பீடு செய்ய முடியாமலும் உள்ளோம். ஆரம்ப சங்கங்க ளிலிருந்து துணை குளிரூட்டும் நிலையங்களுக்கு பால் எடுத்துவரும் வாகனங்களுக்கான வாடகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை அமலாக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வாகனம் வைத்து பால் எடுத்துவரு பவர்கள் கட்டுப்படியாகாத நிலையில் எந்த நேரமும் வாகனத்தை நிறுத்தக் கூடிய சூழ்நிலை உள்ளது. ஆரம்ப சங்கங்களில் குறைந்த சம்பளம் வழங்கப்படுவதால் பணியிலிருப்பவர்கள் பணி ஓய்விற்குப் பின் அப்பணிக்கு யாரும் வருவதில்லை. ஆகவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவிப்பு கோவை, ஜூன் 29- தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேரில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்று, மேட்டுபாளையம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து சட்டமன்றத்தில் அறிவித்த அமைச்சர் மா.சுப்பிரம ணிக்கு, மார்க்சிஸ்ட் கட்சியினர் நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவம னைக்கு புதிய கட்டிட திறப்பு விழாவிற்கு கடந்த 8 ஆம் தேதி வருகை தந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிர மணியத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகாச் செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட தாலுகா குழு உறுப்பினர் கள் மனு அளித்திருந்தனர். இதில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக தேவைப்படும் உள்கட்ட மைப்பு வசதிகள் குறித்து, அவசர, அவசியமான கோரிக்கை கள் குறித்து விரிவான மனு அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரம ணியன், இக்கோரிக்கைகளில் நியாயம் உள்ளது உடனடி யாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மேடையிலேயே அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற மாநிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில், மார்க்சிஸ்ட் கட்சி அளித்த கோரிக்கைகள் ஏற்று, சட்டமன்றத்தில் அறிவித்தார்.  இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் தாலூகா செயலாளர் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை யில், மார்க்சிஸ்ட் சார்பில் முன்வைத்த கோரிக்கையை மேடையிலேயே ஏற்றுக் கொள்வதாக அன்றே அமைச்சர் அறிவித்தார். வெள்ளியன்று மானிய கோரிக்கைகான சட்டமன்ற கூட்டத்தொடரில் மேட்டுப்பாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு செயல்படுத்தப்படும் என்றும், அதற்கான நிதியும் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியான செய்தியை அறிவித் துள்ளார். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) ️மேட்டுப்பாளையம் தாலுகா கமிட்டியின் சார்பில் அமைச்ச ருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், என தெரிவித் துள்ளார்.

துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் நீட்டிப்பு: சிபிஎம் கண்டனம்

சேலம் ஜூன் 29- ஊழல் புகாரில் சிக்கி கைது செய்யப்பட்ட சேலம் பெரியார் பல் கலைக்கழக துணைவேந்தர் ஜெக நாதனின் பதவிக்காலத்தை நீடிப்பு செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம், கட்சியின் மாவட்டக்குழு அலுவலகமான சிறை தியாகிகள் நினைவகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை தமிழக ஆளுநர் நீட்டிப்பு செய்ததற்கு மாவட்டக்குழு சார்பில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கட்சியின் மாவட் டச் செயலாளர் மேவை.சண்முக ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட் டிலுள்ள பல்கலைக்கழகங்களில் சர்ச்சைகளுக்கும், ஊழலுக்கும் பெயர்போனதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மாறியுள்ளது. இந்த பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள் ளதால், அவருக்கு பணி நீட்டிப்பை வழங்கக்கூடாது என்றும், அவர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை களை அரசு எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கள் சங்கம், பணியாளர்கள் சங்கம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல் வேறு அரசியல் கட்சிகள் வலி யுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜெகநாதனின் பதவிக்கா லத்தை வரும் 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை நீட்டித்து, தமிழக ஆளுநரும், பல்கலைக்க ழக வேந்தருமான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். மேலும், அதற் கான ஆணையை துணைவேந்தர் ஆளுநரை நேரில் சந்தித்துப் பெற்றுக் கொண்டார். துணை வேந்தர் ஜெகநாதனின் பதவிக்கா லத்தை நீட்டிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தமிழக ஆளுநரின் தன்னிச்சையான இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு கடும் கண்டனத்தை தெரி வித்து கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட துணை வேந்தர் ஜெகநாதனை மீண்டும் பதவி நீட்டிப்பு செய்த ஆளுநரின் நடவடிக்கைக்கு, பல்கலை கழக பேராசிரியர்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த தகவல் பரவிய நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

குட்கா விற்பனை: 5 கடைகளுக்கு சீல்
குட்கா விற்பனை: 5 கடைகளுக்கு சீல் நாமக்கல், ஜூன் 29- பரமத்திவேலூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 5 கடை களுக்கு சீல் வைக்கப்பட்டு, தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மளிகை கடைகள் மற்றும் டீ கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், பரமத்திவேலுார் காவல் ஆய்வா ளர் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் உணவு பாது காப்பு அலுவலர் ஆகியோர் குப்பிச்சிபாளையம், வேலூர் பழைய பைபாஸ் சாலை, பொத்தனூர் அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், டீக்க டைகள் உள்ளிட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.  இதுதொடர்பாக 5 கடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டு, பூட்டி சீல் வைத்தனர். மீண்டும் குட்கா பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்தனர்.

தீ விபத்து

தீ விபத்து ஈரோடு, ஜூன் 29- கட்டில், பீரோ, நாற்காலி  உள்ளிட்ட வீட்டு உபயோ கப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து ஏற் பட்டது. ஈரோடு மாவட்டம் வீரப் பம்பாளையத்தில் இருந்து  நசியனூர் செல்லும் சாலை யில் கட்டில், பீரோ, நாற்காலி  உள்ளிட்ட மரத்திலான வீட்டு  உபயோகப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய் யும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 20-க் கும் மேற்பட்ட தொழிலா ளார்கள் புதிதாக வீட்டு உப யோக பொருள்களைத் தயா ரிக்கும் பணியில் ஈடுபட்டு வந் தனர். இந்நிலையில், இந்த நிறு வனத்தில் இருந்து வெள்ளி யன்று மாலை 4 மணியளவில் திடீரென கரும்புகை வெளியேறியதைத் தொடர்ந்து, ஊழியா்கள் நிறு வனத்தைவிட்டு வெளியே ஓடி வந்தனர். சற்று நேரத்தில்  பா்னிச்சர் பொருள்களில் தீப் பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. தகவலின்பேரில் ஈரோடு தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரா்கள் 10க் கும் மேற்பட்டோா் 3 தீய ணைப்பு வாகனங்களில் வந்து சுமாா் ஒரு மணி நேரத் துக்கு மேலாக போராடித் தீயை அணைத்தனர். இந்த  விபத்தில் பல லட்சம் ரூபாய்  மதிப்பிலான புதிய பா்னிச்சர்  பொருள்கள் தீயில் எரிந்து  சேதமானதாகக் கூறப்படுகி றது. இது தொடா்பாக ஈரோடு  வடக்கு போலீசார் விசா ரணை மேற்கொண்டனா்.

விதிமுறைகளை மீறும் சரக்கு வாகன ஒட்டிகள்

கோவை, ஜூன் 29- விதிமுறைகளை மீறும் சரக்கு வாகன ஒட் டிள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  கோவை மாநகரில் கட்டுமானப் பணிக் காக வாகனங்களில் இரும்பு கம்பிகள் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு இரும்பு கம்பிகளை கொண்டு செல்லும் போது பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற போக்குவரத்து துறை சார்பில் அறிவுறுத் தப்பட்டு உள்ளது. அதாவது கம்பிகளின் முன்  மற்றும் பின் பகுதியில் சாக்கு மூலம் கட்டப்பட்டு இருப்பதுடன் சிவப்பு நிற துணி  கட்டி இருக்க வேண்டும். ஆனால், இது  போன்ற விதிமுறைகளை சரக்கு வாகன ஓட்டி கள் பலரும் கடைபிடிப்பதில்லை. இந்நிலை யில், கோவை மாவட்டம் டவுன்ஹால் பகுதி யில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி சரக்கு வாகனத்தில் இரும்பு கம்பிகள் கொண்டு  செல்லப்பட்டது. அவ்வாகனம் திருச்சி சாலை யில் உள்ள பந்தய சாலை சந்திப்பின் அருகே  வந்த போது அதில் இருந்து இரும்பு கம்பிகள்  முன் பக்கமாக சரிந்தது. உடனடியாக ஓட்டுநர்  வாகனத்தை நிறுத்தினார். அந்த நேரத்தில் வாகனத்தில் முன்பக்கம் எந்த வாகனமும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் உயிர்த்தப்பினர். அந்த வாகனத் தில் இரும்பு கம்பிகளின் முன் மற்றும் பின் பகு தியில் சாக்கு மூலம் கட்டப்படவில்லை. சிவப்பு நிற துணியும் கட்டப்படவில்லை எனவே, இது போன்ற விதிமுறைகளை மீறும்  சரக்கு வாகன ஒட்டிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவ ரத்து போலீசாரை பொதுமக்கள் வலியு றுத்தி உள்ளனர்.

பேருந்து முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள் அவதி

கோபி, ஜூன் 29- கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து முறையாக இயக்கப்ப டாததால் மாணவ, மாணவிகள் பள் ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியா மல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பொலவக்கா ளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் ஏராளமான மாணவ, மாணவி கள் பயின்று வருகின்றனர். செங்கோட் டையன் நகர், கங்கம்பாளையம், பெரி யார்நகர், ஆலாங்காட்டுபுதூர், தோட் டக்காட்டுர், கடுக்காம்பாளையம் உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் இப்பள்ளிக்கு, அவ்வழியாக இயக்கப்படும் அரசு பேருந்தில் சென்று வருகின்றனர். இந் நிலையில், கடந்த சில தினங்களாக குள் ளம்பாளையம் வழியாக பொலவக்கா ளிபாளையம் வரை பள்ளி குழந்தைக ளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்து முறையாக இயக்கப்படாததால் பள்ளி  குழந்தைகள் அவதியடைந்து வருகின் றனர். இதனால் சுமார் ஒரு கி.மீ., தூரம்  புறவழிச்சாலை வழியாக செல்லும் பேருந்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் குறித்த நேரத்திற்கு பள் ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, குறித்த நேரத்தில் அரசு பேருந்து இயக்க வேண்டும் என  அப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும்  பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

மின்சாரம் தாக்கி பெண் பலி

மின்சாரம் தாக்கி பெண் பலி கோவை, ஜூன் 29- திராவிடத்தமிழர் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் சி. வெண்மணியின், இணையர் சாவித்திரி மின்சாரம் தாக்கி உயி ரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திராவிட தமிழர் கட்சியின் மாநிலத் தலைவராகவும், அகில  இந்திய வழக்கறிஞர் சங்க கோவை மாவட்டக் குழு மற்றும்  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப் பினருமான வழக்கறிஞர் வெண்மணி களப்பணியாற்றி வருகி றார். இவர், போத்தனூர் செட்டிபாளையத்தில் உள்ள அன்பு  நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது இணையர்  சாவித்திரி (49) சனியன்று தனது வீட்டின் அருகே துணிகளை  துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது, அருகில் வெட்டப் பட்ட மரம் விழுந்ததில், மின்சார கம்பி அறுந்து தொங்கி யுள்ளது. இதனை எதிர்பாரத சாவித்திரி, மின் கம்பிகளை மிதித் தாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.  வெண்மணியின் பொது வாழ்வில் உற்ற துணையாக இருந்த சாவித்திரியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்ப டுத்திள்ளது. அவரது மறைவிற்கு அகில இந்திய வழக்கறி ஞர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  கோவை மாவட்டக் குழுக்கள் இரங்கலை தெரிவித்துள்ளது.

கள்ளச்சாராயம் விற்பனை: ஒருவர் கைது

கள்ளச்சாராயம் விற்பனை: ஒருவர் கைது ஈரோடு, ஜூன் 29- அம்மாபேட்டை அருகே கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள கன்னப் பள்ளி, பி.கே.புதூா் பகுதியில் பாலமலை அடிவாரத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படி நடமாடியவரைப் பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் 14 பிளாஸ்டிக் பொட் டலங்களில் கள்ளச்சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவர், சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த பாலமலையில் உள்ள நமன்காட்டைச் சேர்ந்த தர்மலிங்கம் (46) என்பதும், பாலமலை யில் சட்டவிரோதமாக தயாரித்த சாராயத்தை விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த 6 லிட்டர்  சாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.


 


 

 

 

 

;